"சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது.." - கணவருடன் நெருக்கமாக தாமிரபரணி பானு..! - வைரல் புகைப்படம்..!

 
கேரளா மாநிலம் கொள்ளஞ்சேரியை பூர்விகமாக கொண்டவர் நடிகை தாமிரபரணி பானு. மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி என்ற தமிழ் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 
 
இவரது நடித்த முதல் தமிழ் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இவர் முதல் படத்திலேயே மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால், இவர் அழகர்மலை, மூன்று பேர் மூன்று காதல்,சட்டபடி குற்றம், பொன்னர்-சங்கர் என ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். மேலும், இந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை. 
 
தாமிரபரணி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. அதனால், இவர் தமிழ் சினிமாவை விட்டு கொஞ்சம் நாள் விலகி இருந்தார். இதனால் இவர் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். 
 
பின் மலையாள மொழியில் பானு அதிக படங்களில் நடித்து வந்தார். ஆனால், தாமிரபரணி படத்திற்கு பிறகு இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை. 
 
 
இதனால் மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். 


இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை ஓன்று பிறந்தது. இந்நிலையில், கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளார்.
"சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது.." - கணவருடன் நெருக்கமாக தாமிரபரணி பானு..! - வைரல் புகைப்படம்..! "சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடாது.." - கணவருடன் நெருக்கமாக தாமிரபரணி பானு..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on November 13, 2021 Rating: 5
Powered by Blogger.