"அந்த பழக்கத்தை நிறுத்திட்டேன்.." - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..!

 
கவர்ச்சி நடிகை சோனா, அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். சிறு தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 
 
2008 ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் சோனா. அதன் பின்னர் பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். மேலும், நடிகை சோனா இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்தில் நடித்திருந்தார். 
 
 
அதன் பின்னர் இவரை வேறு எந்த தமிழ் பின்னர் காணமுடியவில்லை. இருப்பினும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனா. சில மாதங்களுக்கு முன் இவர் அளித்த பேட்டியில், நீங்கள் ஏன் அதிக படங்களை ஒப்புக்கொள்ளவில்லை ? வாய்ப்புகள் வரவில்லையா ? என்கிற கேள்விக்கு,“சிலர் என்னை திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. 
 
எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் 4 படங்களில் நடித்திருக்கிறேன். 12 படங்களை நிராகரித்திருக்கிறேன். நிம்மதியான நிலையை அடைய வேண்டும் என்று பயணித்து வருகிறேன். பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமில்லை.
 

முன்பு இருந்தது போல் இல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன். இந்த வருடம் நான் சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன்” என்று தன் குடிப்பழக்கத்தைப் கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறியுள்ளார் சோனா.
"அந்த பழக்கத்தை நிறுத்திட்டேன்.." - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..! "அந்த பழக்கத்தை நிறுத்திட்டேன்.." - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..! Reviewed by Tamizhakam on November 03, 2021 Rating: 5
Powered by Blogger.