"குடியும்.. குளியலும்.." - முதன் முறையாக நீச்சல் உடையில் இணையத்தை திக்குமுக்காட வைத்த இளம் நடிகை..!

 
நேரம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சு குரியன். இவர் மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 
 
‘ப்ரேமம்’ புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு தங்கையாக நடித்து அறிமுகமானவர் நடிகை அஞ்சு குரியன். 
 
அதன் பின்னர், தமிழில், இவர் நடித்த சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இதனால், அஞ்சு குரியன் பெரிதும் அறியப்படாமல் போனார். மலையாளத்தில் ஓம் சாந்தி ஓசானா படத்தில் நஸ்ரியாவின் தோழியாக, பள்ளி மாணவியாக நடித்தார். 
 
 
மேலும், பிரேமம், நான் பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள படங்களில் நடித்தார். பின்னர், இவர் நடிப்பில் வெளியான ‘இக்லூ’ திரைப்படத்தின் மூலம் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றார். 
 
 
திரைப்படங்கள் மட்டுமல்லாது சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், போட்டோஷூட் புகைப்படங்கள், நடன வீடியோக்கள் என பதிவிட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகிறார். 


மாடர்ன் உடை, சேலை, தாவணி என அழகு பதுமையாக வலம் வந்த அஞ்சு குரியன், தற்போது, நீச்சல் உடை அணிந்து கொண்டு கையில் ஷாம்பைன் பாட்டிலுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஜில்லென வீடியோ போட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post