"காட்டு கோழி.. கிளாமர் குயின்.." - கவர்ச்சி உடையில்... இளம் நடிகைகளை ஓரம் கட்டும் செந்தில்குமாரி..!

 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சிக்கு அம்மாவக நடித்தவர் பிரபல சீரியல் நடிகை செந்தில் குமாரி. 
 
சரவணன் மீனாட்சி உட்பட பல்வேறு சீரியல்களிலும், ஒருசில படங்களிலும் நடித்துள்ளார் செந்தில் குமாரி.சினிமாவிலும், சீரியலிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் செந்தில் குமாரியின் எழில் கொஞ்சும் புகைப்படங்கள் நெட்டீசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. 
 
 
பசங்க திரைப்படத்தில் அன்பு கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடித்தவர் நடிகை செந்தில் குமாரி. இவர் தனது குரலாலும், பேசும் ஸ்லாங்கிலும் தனக்கான தனி இடத்தை பிடித்தார். 
 
 
சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தற்போதுவானத்தை போல தொடரில் மீண்டும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
 
சீரியல் நடிகர், நடிகைகள் தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதை போலவே செந்தில்குமாரியும் தனக்கான இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 
 
 
செந்தில்குமாரி பதிவிடும் புகைப்படங்களில் அவர் வயதான நபர் போல் அல்லாமல், இளமையாக பார்ப்பவர் ரசிக்கும் படியான தோற்றத்தில் அழகாக ஜொலிக்கிறார். 


சினிமாக்களிலும், சீரியலிலும் அம்மாவாகவே பார்த்து பழகிய செந்தில்குமாரி இப்படி இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அழகோடு இருப்பதை பார்த்த நெட்டீசன்கள் இவரா அம்மா! என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.