ஜிம் உடையில் கும்மென இருக்கும் வரலக்ஷ்மி..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தையும் கடந்து தனக்கென தமிழ் சினிமாவில் தனி அடையாளம் பதித்துள்ளார் நடிகை வரலட்சுமி. முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர். 
 
இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார். இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது. அதன் பின்னர் விஷாலுடன் சண்டைக்கோழி, விஜய்யுடன் சர்கார் ஆகிய படங்களில் வில்லியாக நடித்து அனைவரையும் எதிர்பார்ப்பையும் வேற லெவலுக்கு பூர்த்தி செய்தார். 
 
 
இது அவருக்கு பெயரையும் பெற்றுத்தந்தது. வரலட்சுமி சரத்குமாருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
 
இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. நடுவில் உடல் எடை கூடி குண்டாகினார் அம்மணி. இதனால் பட வாய்புகள் குறையவே, உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடை குறைத்து கட்டுமஸ்தான தோற்றத்தில் கும்மென மாறியுள்ளார் அம்மணி. 

 
அந்த வகையில், ஜிம் உடையில் கும்மென இருக்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்