இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா.? - கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா..!

 
தமிழ் தெலுங்கில் உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலாமானவர் அனுஷ்கா ஷெட்டி.
 
2005-ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 
 
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் கமிட்டானர்.2006ம் ஆண்டு மாதவனுடன் ரெண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 
 
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மொபைலா...மொபைலா.... பாடல் ஹிட் பாடலாக அமைந்து இவரை புகழின் உச்சத்தை தொட வைத்தது.‘தமிழ்,தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவருக்கு திறமையை நிரூபிக்கும் திரைப்படமாக அமைந்தது அருந்ததி. 
 
இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்தது. அதுவரை கவர்ச்சி நடிகையாக காணப்பட்ட அனுஷ்காவின் ரேஞ்சே அருந்ததி படத்திற்கு பிறகு மாறியது. 
 
இறுதியாக, சைஸ் இஸ் ஜீரோ என்ற படத்தில் நடித்த உடல் எடை கூடி குண்டடித்து போனார் அம்மணி. அதன் பின்னர் உடல் எடையை குறைக்க கடுமையாக முயற்சி செய்து பலனில்லாமல் திண்டாடினார். 
 
இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ள அனுஷ்கா பில்லா படத்திற்கு பிறகு மீண்டும் நீச்சல் உடையில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனை அறிந்த நெட்டிசன்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று கலாய்த்தனர்.



இதனை தற்போது ஒரு வழியாக உடல் எடையை குறைத்து பழைய லுக்கிற்கு மாறி தன்னை கலாய்தவர்களுகு பதிலடி கொடுத்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.