நயன்தாராவா இது...? - நம்பவே முடியலயே.. - துளி மேக்கப் இல்லாமல் .. ஆள் அடையாளம் தெரியாமல் நயன்தாரா..!

 
சினிமா உலகில் ஒரு நடிகையை ஓரிரு திரைப்படங்களில் நடித்து விட்டால் தான் மிகப் பெரிய நடிகை என நினைத்துக்கொண்டு சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி செம சீன் காட்டுவார்கள் ஆனால் அதை அடியோடு விட்டு விட்டு ஆரம்பத்தில் இருந்து. தற்போது வரையிலும் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்துகொண்டு பட வாய்ப்பை அள்ளி ஹிட் கொடுத்து வருபவர் நடிகை நயன்தாரா. 
 
மலையாளத்தில் இருந்து வந்தாலும் தமிழ் சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு பயணிக்கிறார். பெரும்பாலும் இவர் கவர்ச்சி காட்டவில்லை. ஆனால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு அவ்வப்போது கவர்ச்சி காட்டுவது மற்றும் தனது முழு திறமையை காட்டி நடித்து வந்ததால் வெகு விரைவிலேயே உச்ச நட்சத்திரங்கள் உடன் கைகோர்க்கும் வாய்ப்பை பெற்றார். 
 
நடிகை நயன்தாரா இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜீத், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் கைகோர்த்து நடித்துள்ளார். போதாத குறைக்கு நடிகை நயன்தாரா பல சோலோ படங்களிலும் நடித்து ஹிட் படங்களை கொடுத்ததால் நடிகர்களுக்கு இணையாக இவரும் பயணிக்கிறார். 
 
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்குகிறார் சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் கதை களம் கொண்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார் என தகவல்கள் சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நயன்தாரா நயன்தாரா துளிக் கூட மேக்கப் போடாமல் இவர் இயற்கையோடு இயற்கையாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாராவா இது...? - நம்பவே முடியலயே.. - துளி மேக்கப் இல்லாமல் .. ஆள் அடையாளம் தெரியாமல் நயன்தாரா..! நயன்தாராவா இது...? - நம்பவே முடியலயே.. - துளி மேக்கப் இல்லாமல் .. ஆள் அடையாளம் தெரியாமல் நயன்தாரா..! Reviewed by Tamizhakam on November 16, 2021 Rating: 5
Powered by Blogger.