தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரகதி. பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பிரகதி, அதனைத் தொடர்ந்து விஜயகாந்த், பாண்டியராஜன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.
தற்போது கூட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் தெலுங்கு சினிமாவில் பல நடிகர்களுக்கும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரகதி இடம் முன்னணி மூத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அந்த நடிகரை தனியாக கூப்பிட்டு அவருக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்திருந்தார் பிரகதி.
அவ்வப்போது இளம் நடிகை போல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
தற்போது ஃபேஷன் ஷோவில் உடை அணிவது போன்று கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார்.
இதைத்தவிர ஜிம் ஒர்க் அவுட் செய்து கிட்டத்தட்ட 18 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சினிமா வாய்ப்பு வருமா என்பது சந்தேகம்தான்.
Tags
Pragathi Mahavadi