1500 விவாகரத்து வழக்குகள்.. அதுவும் இந்த காரணத்தினால் மட்டும்.. - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு..!


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்றும் ஏழு தலைமுறைகள் நீடிக்கும் பந்தம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், உத்திரபிரதேசத்தில் இந்த தத்துவம் வேகமாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
மாநிலத்தின் 75 மாவட்டங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. திருமணமான தம்பதிகளுக்கிடையேயான பிரச்சனைகளின் எண்ணிக்கை நவீன யுகத்திற்கு ஏற்ப அதிகரித்து வருகிறது. 
 
மணப்பெண்கள் வரலாற்று ரீதியாக தங்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து வளர்கிறார்கள். இந்த நிலை அவர்களுக்கு புதிதல்ல. தம்பதியரின் குடும்பங்களே இதற்கு உந்து சக்தியாக இருந்தது. 
 
ஆனால், இன்றைய சூழலில் உறவினர்கள் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு வரன் தேடுபவர்களே அதிகம் இருக்கிறார். சொந்தக்காரங்க அதிகமா இருக்குற குடும்பத்துல சம்பந்தம் வச்சிக்க கூடாது-ன்னு புது பார்முலோவோடு தான் வரன் தேடவே இறங்குகிறார்கள் நவீன காலத்து பெற்றோர்கள். 
 
இதன் விளைவாக, சிறு சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் வந்தாலே எடுத்து சொல்ல ஆள் இல்லாமல், உட்கார்ந்து பேச நாதி இல்லாமல் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என வண்டியை திருப்பி விடுகிறார்கள். 
 
எல்லா மாநிலங்களிலும் இது தான் நிலை. நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் இந்த பிரச்சினை இன்னும் மோசமாக உள்ளது. 
 

ஆண்டுக்கு 1500 விவாகரத்து வழக்குகள்

 
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 தம்பதிகள் இங்குள்ள நீதிமன்றங்களை விவாகரத்து வேண்டி அணுகுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சமூக ஊடக நிறுவனத்தின் அறிக்கையின் படி, இப்படி விவாகரத்து கோருவோர். திருமணமாகி சில நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குள்ளாகஇருப்பவர்களாம்.
 
இந்த எண்ணிக்கையின்படி, 1500 ஜோடிகளில் 400 ஜோடிகள் ஏற்கனவே காதல் வயப்பட்டுள்ளனர். அவர்களுக்கிடையே உருவாகும் சந்தேகத்தில் இருந்து அவர்களின் சண்டை உருவாகிறது. 
 
மருமகள் மற்றும் மாமியார் இடையே ஏற்படும் மோதல்கள் அடுத்த 400 ஜோடிகள் பிரிவுக்கு காரணம். தரவுகளின்படி இருவருக்கும் இடையே நடக்கும் வன்முறை சண்டைகள் குறைவாகவே உள்ளன.
 
தம்பதியர்களுக்குள் இருக்கும் கண்ணிய குறைவு தான் அதீத விவாத பொருளாகி விவாகரத்து வரை வந்து விடுகின்றது. திருமணம் என்ற பந்தத்திற்குள் செல்லும் போது தவறான தொடர்புகள், அதனால் ஏதாவது பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை முற்றிலுமாக முடித்து விட்டு, அப்படியான பழக்கங்களை விட்டொழித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.