"அடேங்கப்பா..!.." - பிக்பாஸில் இசைவாணிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம்..! - கிறுகிறுன்னு வருதே..!

 
தமிழ் சின்னத்திரை ரசிகர்களை ஆர்வமுடன் டிவி முன் அமர வைக்கும் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸின் 5-ஆம் சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக துவங்கியது பிக்பாஸ் சீசன் 5.
 
இந்நிலையில் கடந்த வாரம் தமிழகத்தின் கானா பெண் பாடகியான இசைவாணி பிக்பாஸ் சீசன் 5-லிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். இவர் வட சென்னையான ராயபுரத்தை சேர்ந்தவர். 
 
சிறிய வயதில் இசை மீது பெரிதாக ஆர்வம் இல்லாவிட்டாலும், 7 வயதில் பாட துவங்கி உள்ளார் இசைவாணி. தந்தை கீ போர்ட் பிளேயர் என்பதால் அதன் பிறகு தந்தையுடன் சேர்ந்து பாடல் பாட மேடை ஏறி உள்ளார். கானா மீதான ஆர்வம் இவருக்கு 2010-ம் ஆண்டுக்கு பிறகு தான் வந்துள்ளது. 
 
 
ஆண்கள் மட்டுமே பாடி வந்த கானாவை, முதல்முறை இசைக்கச்சேரியின் போது இளைஞர்கள் கேட்டு கொண்டதால் மேடையிலேயே முயற்சித்து நன்றாக பாடி அசத்தி கை தட்டல்களை அள்ளி இருக்கிறார். இதன் பிறகு தான் கானாவில் ஏன் கவனம் செலுத்த கூடாது என்று நினைத்து கானா ஸ்பெஷலிஸ்டாகி இருக்கிறார் இசைவாணி. 
 
தொடர்ந்து தனது கானா பாடல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் இசைவாணி. இவர் பிக்பாஸ் டைட்டிலை நிச்சயம் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 வாரங்கள் மட்டுமே தாக்கு பிடித்துள்ளார்.
 

தற்போது பிக்பாஸில் பங்கேற்றதற்காக இசைவாணிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. வாரத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் தான் பங்கேற்ற 7 வாரங்களுக்கு மொத்தமாக ரூ.7 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார் இசைவாணி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.