முகம் தெரியாதவராக இருந்த ஜூலி, மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழக முழுவதும் அறிந்தவரானார். அதன் பின் அவரது போராட்டம் முழக்கம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதில் கிடைத்த அறிமுகத்தின் மூலம் கமல்ஹாசனின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு இவர் அழைக்கப்பட்டார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தொடங்கியது முதலே ஜூலி பார்வையாளர்களால் வில்லியாக பார்க்கப்பட்டார். அவருக்கு அந்நிகழ்ச்சி மூலம் நெகட்டிவ் இமேஜ் அதிகம் கிடைத்தது. அதன் பிறகு அவர் தமிழகம் அறிந்த பெண்ணாக ஆனார். ஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது.
அதை அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியும் இருந்தார். இவர் நேற்று அமைந்தகரை காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார். அவரது புகாரில் "அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த மனிஷ் (26). அண்ணா நகரில் உள்ள தனியார் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு மனிஷ் மீது காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்து வந்தோம்.கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததால் மனிஷ் என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்தார். இதனால் மனிஷுக்கு இருசக்கர வாகனம்,16 கிராமில் தங்க செயின், ஃபிரிட்ஜ் என 2.30 லட்ச ரூபாய் வரை செலவு செய்தேன்.
இந்த நிலையில் திடீரென மனிஷ் கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி மதத்தை காரணம் காட்டி பெற்றோர்கள் சம்மதிக்க மறுப்பதாக தெரிவித்து காதலை முறித்து கொண்டார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்