ஜெயம் ரவியின் வனமகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை சாயிஷா. தனது அபார நடன திறமையால் லேடி பிரபுதேவா என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர், விஜய் சேதுபதி, கார்த்தி என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து அசரடித்தார்.
முன்னணி ஹீரோயின்களை ஆச்சரியப்படும் அளவுக்கு சாயிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
பின்னர், இருவீட்டாரின் சம்மதத்துடன் ஆர்யாவும், சாயிஷாவும் திருமண பந்தத்தில் இணைந்தனர். தன்னை விட வயதில் 17 வயது இளையவரான சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்ததைக் கண்டு ரசிகர்கள் மட்டுமல்ல சிங்கிள்ஸ்சாக இருப்பவர்களும்கூட பொறாமைபட்டனர்.
ஹைதராபாத்தில் நடந்த இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில், "நீரின் குழந்தை" என கூறி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.