நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சமூக ஊடகங்களில் தனது மகனை அறிமுகம் செய்துள்ளார். என்ன வரலட்சுக்கு மகனா, அவருக்கு எப்போது கல்யாணம் ஆனது, குழந்தை பிறந்தது, நமக்கு தெரியாமலா என்று ஷாக் ஆகாதீர்கள்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் நிறைய வந்துள்ளார்கள். ஆனால், அவர்கள் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நீடிக்க முடியும். இல்லாவிட்டால், கோலிவுட்டின் கமர்சியல் சூறாவளியில் சில படங்களிலேயே காணாமல் போக வேண்டியதுதான்.
அப்படி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி வாரிசு நடிகையாக சினிமாவுக்குள் வந்தாலும் தனது திறமையால் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஹீரோயின் நடிகை என்றால், வெறும் கவர்ச்சி, அசட்டுப் பெண்ணாக மட்டும் நடிக்காமல், ஹீரோயின், வில்லி என வரலட்சுமி கலவையாக ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.
போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி, விரைவிலேயே தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, மாரி 2 ஆகிய படங்களில் குறிப்பிடும் படியாக நடித்துள்ளார். அதே நேரத்தில் சர்க்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த வரலட்சுமியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இதையடுத்து, சிறப்பாக எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்து வாங்கும் வரலட்சுமிக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றனர். இதனால், வரலட்சுமி தென்னிந்திய சினிமாக்களில் நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை வரலட்சுமி சினிமா மட்டுமல்லாமல், விலங்குகள் பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகள் நலன், பெண்ணுரிமை என செயல்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். இந்த சூழலில்தான், நடிகை வரலட்சுமி சமூக ஊடகங்களில் இதுதான் எனது மகன் என்று தனது மகனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
வரலட்சுமிக்கு மகனா, நமக்கு தெரியாமல் அவருக்கு எப்போது கல்யாணம் ஆனது எப்போது குழந்தை பிறந்தது என்று யோசிக்காதீர்கள். வரலட்சுமி தனது க்யூட்டான செல்ல நாய்க்குட்டியைத்தான் இதுதான் எனது மகன் என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
வரலட்சுமி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது நாய்க்குட்டியை மகன் என்று தி லயன் கிங் படத்தில் சிம்பாவை அறிமுகப்படுத்தும்போது ஒலிக்கும் இசையுடன் அறிமுகப்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், வேற லெவல் வரு என்று பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர். இதெல்லாம், ரொம்ப ஓவரு வரு என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
0 கருத்துகள்