நடிகை தீபிகா, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் பண்ருட்டியை சேர்ந்தவர். தனது கல்லூரி நாட்களிலிருந்தே டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார். தீபிகா வார இறுதி நாட்களில் ஒரு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின்னர் முழுநேர செய்தி தொகுப்பாளராக மாறினார். இறுதியில், விஜய் டிவி ‘லட்சுமி கல்யாணம்’ தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் தீபிகா. அதில் லட்சுமி வேடத்தில் நடித்த அவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் சில திரைப்படங்களிலும் தீபிகா நடித்துள்ளார்.
தற்போது நடிகை தீபிகா தனது புதிய நிகழ்ச்சியான ‘சித்திரம் பேசுதடி’ மூலம் பார்வையாளர்களை மகிழ்விக்கத் தயாராகி வருகிறார், இந்த தொடரில் பாலின சார்பு மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான சமூக பிரச்சினைகளைக் கையாள்கிறது. அது குறித்து தனது மகழ்ச்சியை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
“என் கண்முன்னே சித்திரமாய் ஓடிக்கொண்டிருந்த கனவுகள் ஒவ்வொன்றும் நிஜமாக தொடங்கிவிட்டன “சித்திரம் பேசுதடி ” வாயிலாக… தங்கமயிலின் லட்சியம் நிறைவேற மக்களாகிய உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் தேவை" என கூறிகிறார். சினிமா உலகில் இருப்பவர்களுக்கு விளம்பரம் மிகவும் அவசியம். ஏதாவது ஒரு வகையில் ரசிகர்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
அதற்கு சமூக ஊடகங்கள் பெரிதும் உதவுகின்றன என்பதை நம்புகிறார் அம்மணி. ஆனால், மற்ற நடிகைகளை போல ஏனோ தானோ என கவர்ச்சியை காட்டாமல் பக்கத்துக்கு வீட்டு பெண் போல எளிய உடைகளில் குடும்பப்பாங்கான புகைப்படங்களை மட்டுமே அப்லோட் செய்கிறார்.
இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள், "நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுக்கட்ட.." என்று வர்ணித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்