மேஷம் (Aries):
இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக வெற்றி கிடைக்கும் நாள். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தந்தையின் கழுத்து வலி பிரச்சனைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பீர்கள். தாயார் விரும்பிய பொருளை வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான கணிசமான ஆர்டர்களைப் பெறுவீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 9, 7, 6, 1
ரிஷபம் (Taurus):
பயணங்களில் அலட்சியம் வேண்டாம். கைப்பொருட்களை இழக்க நேரிடலாம். வியாபாரம் மந்தமாக இருப்பதால் மனக்கவலை ஏற்படும். கடனை உரிய நேரத்தில் அடைக்க முடியாமல் திணறுவீர்கள். காதலியின் புரிந்து கொள்ளாத பேச்சால் மனம் புண்படும். சைனஸ் பிரச்சனை தொந்தரவு கொடுக்கும், மருத்துவரை அணுகுவது நல்லது.
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 6, 1, 2, 9
மிதுனம் (Gemini):
இரவு நேர இருசக்கர வாகன பயணங்களை தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். நெருங்கிய நண்பரே போட்டிக்கு வருவதால் மன வேதனை அடைவீர்கள். தாய்மாமன் சீர் செய்வதற்காக கடன் வாங்க நேரிடலாம். அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம், அவமானம் ஏற்படலாம். வாகனத்தில் பழுது ஏற்பட்டு சிரமப்படுவீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்
- அதிர்ஷ்ட எண்: 5, 9, 4, 3
கடகம் (Cancer):
இன்று நீங்கள் நினைத்த காரியங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் ஏற்படுவதால் மகிழ்ச்சி நிலவும். வயதான பெற்றோர்கள் உங்களை மனதார பாராட்டுவார்கள். பிள்ளைகளின் நல்ல நடத்தையால் மனம் மகிழும். வியாபார பிரச்சனைகளை சுலபமாக சமாளிப்பீர்கள். நண்பர்களின் ஆதரவால் அலைச்சல் குறையும்.
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை
- அதிர்ஷ்ட எண்: 2, 3, 8, 5
சிம்மம் (Leo):
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அனாவசிய செலவுகள் கூடுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். ஆனால் விடாமுயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். புதிய தொழில்களில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிறு வியாபாரிகளுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும்.
- அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை
- அதிர்ஷ்ட எண்: 1, 7, 6
கன்னி (Virgo):
கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடுவீர்கள். உறவினர்களால் மன வருத்தம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருந்தாலும் சில தொல்லைகள் வந்து போகும். மனைவி மற்றும் குழந்தைகளின் ஆதரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். வங்கிக்கு செல்லும் போது பணத்தை பத்திரமாக எடுத்துச் செல்லவும்.
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 5, 1, 2, 9
துலாம் (Libra):
எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து அனைவரையும் சந்தோஷப்படுத்துவீர்கள். வேலையில் அக்கறையுடன் செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நிலம் வாங்குவதற்காக முன்பணம் செலுத்துவீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை
- அதிர்ஷ்ட எண்: 6, 9, 4, 3
விருச்சிகம் (Scorpio):
உங்கள் முயற்சிகள் நல்ல பலன் தருவதை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்திற்காக பணம் புரட்டுவீர்கள். உதவி செய்யும் நண்பர்களை மறக்காமல் நன்றி செலுத்துங்கள். விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அரசியல்வாதிகளின் ஆதரவை பெறுவீர்கள். எங்கு சென்றாலும் புகழும் செல்வாக்கும் கிடைக்கும். தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்
- அதிர்ஷ்ட எண்: 9, 3, 8, 5
தனுசு (Sagittarius):
அனாவசிய செலவுகளால் அவதிப்படுவீர்கள். உதவி செய்வதன் மூலம் உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபட வேண்டாம். பங்குச் சந்தை சரிவால் மன வருத்தம் ஏற்படும். உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் சிறப்பான பலன்களை அடைவீர்கள். மனை மற்றும் இடம் வாங்குவீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 3, 7, 6, 1
மகரம் (Capricorn):
நண்பரின் ஒத்துழைப்பால் ஓரளவு நன்மை அடைவீர்கள். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவ செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். பெற்றோர்களால் மன சங்கடம் உண்டாகும். கொடுத்த பணம் குறித்த நேரத்தில் திரும்பி வராமல் திணறுவீர்கள். வம்பு வழக்குகளில் சிக்கினால் அவமானத்தை சந்திக்க நேரிடும்.
- அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 8, 1, 2, 9
கும்பம் (Aquarius):
மனைவியின் மனம் நோகாமல் நடந்து கொள்ளுங்கள். வாகனத்தை கவனமாக ஓட்டவும், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் கோபம் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டியை சந்திக்க நேரிடும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் கடிதங்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும்.
- அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
- அதிர்ஷ்ட எண்: 8, 9, 4, 3
மீனம் (Pisces):
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை நீக்கி உறவை வலுப்படுத்துவீர்கள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். பொருளாதார நிலை உயரும்.
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை
- அதிர்ஷ்ட எண்: 3, 8, 5
நன்றி..!