இன்றைய ராசிபலன் - பிப்ரவரி 25, 2025 - செவ்வாய் கிழமை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பலன்களைக் கொண்டு வரும். இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசி பலன்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். உங்கள் அதிர்ஷ்ட நிறம் மற்றும் எண்கள் என்ன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! மேஷம் (Aries): இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக வெற்றி கிடைக்கும் நாள். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தந்தையின் கழுத்து வலி பிரச்சனைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பீர்கள். தாயார் விரும்பிய பொருளை வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான கணிசமான ஆர்டர்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 9, 7, 6, 1 ஒரே ராசி அல்லது ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா..? ரிஷபம் (Taurus): பயணங்களில் அலட்சியம் வேண்டாம். கைப்பொருட்களை இழக்க நேரிடலாம். வியாபாரம் மந்தமாக இருப்பதால் மனக்கவலை ஏற்படும...