இந்திய சினிமாவில் கிளாமர் பாடல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. சமீபத்திய உதாரணங்களாக, கடந்த ஆண்டு வெளியான 'புஷ்பா 2' படத்தில் கூட இரண்டு கிளாமர் பாடல்கள் இடம்பெற்றிருந்ததை சொல்லலாம்.
இந்த பாடல்களில் படங்களில் நடிக்கும் நடிகைகள் ஆடுவதோடு, சில சமயங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி படத்தின் அடையாளமாகவே மாறிப்போகும் நடிகைகளும் உண்டு.
'புஷ்பா' முதல் பாகத்தில் சமந்தாவும், 'ஜெயிலர்' படத்தில் தமன்னாவும் அந்த வகையில் நடனமாடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புகழ்பெற்ற பாடகி ஸ்ரேயா கோஷல், தான் பாடிய ஒரு கிளாமர் பாடலுக்காக வருத்தம் தெரிவித்துள்ள சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
முன்பெல்லாம் கிளாமர் பாடல்கள் நடனம் மற்றும் உடை அலங்காரத்தில் மட்டுமே கவர்ச்சியை வெளிப்படுத்தின. ஆனால், காலங்கள் மாற மாற கிளாமர் பாடல்களின் பாடல் வரிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் அம்சமாக மாறிவிட்டன.
முற்காலத்தில் கிளாமர் பாடல்களை பாடுபவர்கள், ரசிகர்களை மயக்கும் குரலில் பாடி அசத்துவார்கள். ஆனால் தற்போதைய ட்ரெண்டில், பாடல் வரிகளிலேயே கில்மா வரிகளை பயன்படுத்தி பாடல்கள் உருவாக்கப்படுகின்றன.
உதாரணமாக, 'புஷ்பா 2' படத்தில் இடம்பெற்றுள்ள "ஃபீலிங்ஸ்" பாடலை எடுத்துக்கொண்டால் பாடல் வரிகளின் கில்மாத்தனம் புரியும். வரிகளே இப்படி இருக்கையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளார். 'புஷ்பா 2' படத்தில் இடம்பெற்ற கவர்ச்சி பாடலை விட, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவே ஓவர் கிளாமர் காட்டியிருப்பது ரசிகர்களை சிலிர்க்க வைத்தது.
அதே படத்தில் கிளாமர் பாடலுக்கு நடனமாடிய நடிகை ஸ்ரீ லீலாவை விட, ராஷ்மிகா மந்தனாவே அதிக கவர்ச்சி காட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியான ஸ்ரேயா கோஷல் தான் பாடிய ஒரு கில்மா பாடலை நினைத்து வருந்துவதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர அளித்துள்ளது. இதுகுறித்து ஸ்ரேயா கோஷல் கூறுகையில், "அக்னிபாத் படத்தில் இடம்பெற்றுள்ள 'சிக்னி சமேலி' என்ற ஐட்டம் பாடலை சிறு குழந்தைகள் கூட பாடலின் அர்த்தம் என்னவென்று தெரியாமலேயே பாடுகிறார்கள். அந்த பாடலுக்கு நடனமும் ஆடுகிறார்கள்.
மேலும், இந்தப் பாடல் ரொம்ப நன்றாக உள்ளது என்று என்னிடமே கூறுகிறார்கள்." என வேதனை தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய ஸ்ரேயா கோஷல், "யாராவது என்னிடம் வந்து உங்களுக்காக இந்த பாடலை பாடுவேன் என்று கூறினால் எனக்கு சங்கடமாக உள்ளது.
5, 6 வயது குழந்தைகள் இதுபோன்ற பாடல் வரிகளைப் பாடுவது சரியல்ல. இந்தப் பாடலை பாடியதற்காக நான் வெட்கப்படுகிறேன்" என்று மனம் திறந்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஸ்ரேயா கோஷலின் இந்த கருத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகை மற்றும் பாடகியான ஆண்ட்ரியா, 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற "ஊ சொல்றியா மாமா" பாடலை பாடியதற்காக வருத்தப்படுவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலும் கில்மா பாடல் வரிசையில் இடம்பெற்றது.
ஸ்ரேயா கோஷல் வருத்தம் தெரிவித்த 'சிக்னி சமேலி' பாடல் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான 'அக்னிபாத்' படத்தில் இடம்பெற்றது. இந்த படத்தில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கதாநாயகனாக நடித்தார்.
"சிக்னி சமேலி" பாடலில் நடிகை கத்ரீனா கைஃப் நூற்றுக்கணக்கான ஆண்களுக்கு மத்தியில் ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்திழுத்திருப்பார். இந்த பாடலின் வீடியோ யூடியூப் தளத்தில் இதுவரை 478 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. கிளாமர் பாடலுக்கு பாடியதற்காகவே ஸ்ரேயா கோஷல் வருத்தம் தெரிவித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.