டைட்டாக இருப்பதை தான் போடுவேன்.. துப்பட்டா போடலனா தான் "அது" அழகா தெரியும்.. ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுனதை கேட்டீங்களா..?

 
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சொப்பன சுந்தரி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 
 
இவருடைய இந்த பேட்டியை தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 
 
முன்னணி ஹீரோக்களுடன் நடித்தால்தான் முன்னணி ஹீரோயின் ஆக முடியும் என்ற எழுதப்படாத சட்டத்தை தகர்த்து எறிந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 
 
சொல்லிக் கொள்ளும்படி எந்த முன்னணி ஹீரோவோடும் ஜோடி சேராமல் முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதற்கு முக்கியமான காரணம் அவருடைய எதார்த்தமான நடிப்பு என்று கூறலாம். 
 
 
இந்நிலையில், சொப்பன சுந்தரி என்ற படத்தில் நடித்தது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். அந்த படத்தில் வரக்கூடிய கதாபாத்திரம் எந்த பகுதியில் வசிக்கிறதோ அந்த பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து பெண்களுமே துப்பட்டா போடுவார்கள் தலைமுடியை பின்னி இருப்பார்கள். 
 
ஆனால், படத்தின் இயக்குனர் என்னை துப்பட்டா போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். தலை முடியை பின்ன வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 
 
 
நான் அந்த படத்தில் டைட்டாக இருக்கக்கூடிய சுடிதாரை தான் அணிவேன். ஆனாலும், துப்பட்டா போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். சார், இந்த பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து பெண்களுமே துப்பட்டா போட்டு இருக்கிறார்கள். தலைமுடியை பின்னி இருக்கிறார்கள். 
 
நானும் அப்படி இருந்தால்தான் இந்த பகுதியில் வசிக்கக்கூடிய பெண்கள் போல நான் தோற்றமளிப்பேன் என கூறினேன். ஆனால், இயக்குனர் அப்படி எல்லாம் இருக்க வேண்டாம். 
 
நீங்கள் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் மிகவும் தைரியமான கதாபாத்திரம் அப்படி எல்லாம் இருக்க வேண்டாம். இப்படி இருந்தால் தான் உங்களுடைய கதாபாத்திரம் அழகாக தெரியும்.. உங்களுடைய கதாபாத்திரத்தின் குணாதிசயத்திற்கு இதுதான் சரியாக இருக்கும் என கூறினார்.
 

அதனால் தான் சொப்பன சுந்தரி படத்தில் துப்பட்டா போடவில்லை என்று பேட்டியில் பதிவு செய்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கூறியது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் கருத்தை பதிவிடலாம்.