பிரபல நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். குக் வித் கோமாளி 4வது சீசன் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில், சென்னையில் நாளை மறுநாள் பிரபுதேவா நடத்தும் பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கேவும் பங்கேற்று நடனம் ஆடவுள்ளார்.இந்த நடன நிகழ்ச்சி ஸ்ருஷ்டி டாங்கேவின் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
பிரபுதேவா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே இருவரும் இணைந்து ஆடும் நடனத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன..
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அன்புள்ள ரசிகர்களே, நான் பிரபுதேவா கச்சேரியிலிருந்து வெளியேற முடிவு செய்ததை பகிர்ந்து கொள்வதில் வருத்தப்படுகிறேன்.
இந்த முடிவு எந்த வகையிலும் பிரபுதேவா சாரை நோக்கி எடுக்கப்படவில்லை. நான் அவருக்கு மிகப்பெரிய ரசிகை. இருப்பினும், பாகுபாடு மற்றும் சாய்வுக்காக என்னால் நிற்க முடியாது.
இத்தனை வருடங்கள் இத்துறையில் இருந்தும், உங்களுக்குத் தகுதியானவற்றுக்காக நீங்கள் இன்னும் போராட வேண்டியுள்ளது என்பது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.
பொய்யான வாக்குறுதிகள் மற்றும் நிறைவேற்றப்படாத உறுதிமொழிகள் ஏமாற்றமளிக்கின்றன, இவையே எனது முடிவின் முக்கிய காரணங்களாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "பிரபுதேவாவைக் கொண்டாட எனக்கு எந்த நிகழ்வும் தேவையில்லை. நாங்கள் அவரை எப்போதும் கொண்டாடுவோம்.
ஆனால், இது ஒரு நேசத்துக்குரிய நினைவாக இருந்திருக்கலாம், மாறாக, அது ஏமாற்றத்தில் முடிந்தது.
ஒருவேளை அடுத்த முறை, ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான மிகவும் மரியாதைக்குரிய இடத்தில், விஷயங்கள் வித்தியாசமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
ஸ்ருஷ்டி டாங்கேவின் இந்த அறிக்கை அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்