இறந்தவர்களை விண் வெளிக்கு எடுத்து சென்று.. வெளியான தகவல்.. அதிரும் உலக நாடுகள்..!


இறந்தவர்களை விண்வெளியில் அடக்கம் செய்யும் புதிய நடைமுறையை அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. 
 
அதன்படி இறந்த உடல்களை எதிர்த்து அதில் வரும் சாம்பலை ஒரு கண்ணாடி குப்பியில் அடைத்து அந்த கண்ணாடி குப்பியில் இறந்தவரின் பெயர் இறந்த வருடம் ஆகியவற்றை எழுதி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு எடுத்துச் சென்று பால் வெளியில் பூமியை சுற்றி பறக்க விடுவார்களாம். 
 
இறந்தவர்களின் உடல்களை பூமியில் புதைப்பதை விடவும் இங்கே எரித்து விண்வெளியில் பறக்க விடுவது தான் பேசுபொருளாக மாறி இருக்கிறது. கூடவே பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 
 
இதன் மூலம் இறந்த உடல்களை பூமியில் புதைக்கும் பழக்கம் குறைந்து தங்களுடைய முன்னோர்களை விண்வெளியில் பறக்க விடுவதற்கான முயற்சியை மேற்கொள்ள பலரும் திட்டம் தீட்டி வருகிறார்கள். 
 
இந்த திட்டத்தை அறிவித்த உடனேயே பலரும் இதற்கான முன்பதிவு செய்திருக்கிறார்களாம். இது என்னடா கொடுமையா இருக்கு..? என்று உலக நாடுகள் பலவும் அதிர்ந்து வருகின்றன. 
 
ஏற்கனவே பூமியை குப்பையாக்கியது போதாது என்று தற்போது விண்வெளியையும் குப்பையாக கிளம்பி விட்டார்களோ..? இதற்கு ஆரம்பத்திலேயே முடிவு கட்ட வேண்டும் எனவும்.. இதனால் ஏதேனும் மோசமான பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா..? என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்