படப்பிடிப்பு தளத்தில்.. அவர் என் நண்பர்.. ஆனால்.. இதை முளையிலேயே கிள்ள வேண்டும்.. பாபநாசம் பட நடிகை காட்டம்..!

 
கொச்சி: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சித்திக் தன்னை தவறாக நடத்தினார் என்ற பரவி வரும் தகவல்கள் குறித்து நடிகை ஆஷா சரத் பதிலளித்துள்ளார். 
 
இவர் திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
 
தனது பேஸ்புக் பதிவில், சித்திக்கிடமிருந்து எந்தவிதமான முறையற்ற நடத்தை அல்லது காயப்படுத்தும் செயல்களையும் அவர் அனுபவித்ததில்லை என்று கூறியுள்ளார். 
 
 
சினிமா துறையில் தற்போது விவாதிக்கப்படும் பிரச்சினைகளுடன் தொடர்புடைய எனது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டதால் நான் இந்த குறிப்பை எழுதுகிறேன். 
 
நான் உண்மையை தெளிவுபடுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என்று ஆஷா சரத் எழுதியுள்ளார். 
 
 
திரிஷ்யம் படப்பிடிப்பின் போது திரு. சித்திக் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று ஒரு செய்தி பரவி வருவது என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 
 
 
திரு. சித்திக் கலைத்துறையில் எனது நல்ல சக ஊழியர் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் நல்ல நண்பரும் கூட. இதுவரை, அவரிடமிருந்து எந்த கெட்ட செயலையோ அல்லது காயப்படுத்தும் சொல்லையோ நான் சந்தித்ததில்லை.
 
இப்படி இருக்கும் போது, அவர் என்னை தவறாக நடத்தினார் என்ற இந்த பொய்யான வதந்திகளை பரப்புபவர்கள் நிறுத்த வேண்டும் என்று ஆஷா சரத் வலியுறுத்தியுள்ளார். 
 
மேலும், மலையாளத் திரைப்படத் துறையில் உண்மை மற்றும் நேர்மையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மலையாள சினிமா மற்ற நாடுகளுக்கு உதாரணமாக, ஒரு பெரிய கலைக் குடும்பமாக வளர வேண்டும் என்பது எனது விருப்பமும் நம்பிக்கையும். 
 
 
விரும்பத்தகாத ஒன்று நடந்தாலோ அல்லது வளர்ந்தாலோ, அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எரிய வேண்டும். அதே நேரத்தில், இத்தகைய பொய்யான பிரச்சாரத்தைப் பரப்பி சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பவர்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். 

சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக நீதி வேண்டும் என்று அவர் தனது பதிவை எழுதியுள்ளார். கலைத் திறமையும் விருப்பமும் கொண்ட எவரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் பணிபுரியும் சூழலில் இருக்க வேண்டும் என்று ஆஷா சரத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
 
 
தொழில்துறையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க அரசாங்கமும் கலை ஆர்வலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார் ஆஷா சரத்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்