"அப்போ.. அதெல்லாம் பொய்யா கோப்பால்.." நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யாரு தெரியுமா..?

 

நடிகை நயன்தாராவுக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே நிலவிய மோதல்கள் திரையுலகில் அனைவரும் அறிந்த விஷயம். 

தங்களது திருமண வீடியோ ஆவணத்தில் "நானும் ரௌடிதான்" திரைப்பட காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதி மறுத்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தன. 

 

இதன் விளைவாக நயன்தாராவும் தனுஷும் பரம எதிரிகளைப் போல மாறிவிட்டனர் என்று கூட கூறப்பட்டது. 

இந்நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பமாக, நடிகை நயன்தாரா நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாக இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை நயன்தாரா ஏற்கனவே நடிகர் சிம்புவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி, பின்னர் அவரை பிரிந்து நீண்ட காலத்திற்கு பிறகு "இது நம்ம ஆளு" திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

அதேபோல, தற்போது தனுஷுடன் கடுமையான மோதலில் இருந்த நயன்தாரா, தற்போது அவருக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக செய்திகள் பரவுவதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 

"அப்போ அந்த சண்டை எல்லாம் பொய்யா?" என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

கீரியும் பாம்பும் போல சண்டை போட்டுக் கொண்டவர்கள் இப்போது மீண்டும் இணைந்து நடிப்பதா என பலரும் ஆச்சரியம் கலந்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இருப்பினும், நடிகை நயன்தாரா தனுஷ் படத்தில் ஹீரோயினாக நடிப்பது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடிப்பது உண்மையா? அல்லது இது வெறும் வதந்தியா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஒரு காலத்தில் எதிரிகளாக பார்க்கப்பட்டவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

ஒருவேளை இது நடந்தால், திரையுலகில் இது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாகவும், பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விஷயமாவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--