#GetOutModi vs #GetOutStalin நடுவுல நடக்கும் இன்னொரு கூத்தை பாத்தீங்களா..?

 
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாட்டின் துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாரத பிரதமர் மோடியை இத்தனை நாட்களாக #GoBackModi என்று சொல்லி வந்தோம். இனிமேல் #GetOutModi என்று சொல்ல போகிறோம் என பேசி இருந்தார். 
 
இது பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தனை நாட்களாக திமுகவிலிருந்து மூன்றாம் கட்ட பேச்சாளர்கள் தான் இப்படியான பேச்சுகளை பேசிக் கொண்டிருந்தனர். தற்போது, மாநிலத்தின் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினே எப்படி பேசுகிறார் என்று கொந்தளிப்பை வெளியிட்டு வந்தனர். 
 
 
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் இனிமேல் பாஜகவினரையும் பாரத பிரதமர் மோடி ஐயாவையும் மரியாதையுடன் பேசினால் அவர்களுக்கு மரியாதை உடன் பதில் அளிப்பேன் மரியாதை இல்லாமல் பேசினால் அவர்களுக்கு என் வாயிலிருந்து மரியாதையான பதில் வராது என்று தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசியிருந்தது நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது. 
 
நீ ஒரு ஆளா இருந்தால் உன் வாயிலிருந்து கெட் அவுட் மோடி என்று சொல்லுடா பார்க்கலாம்.. நீ அப்படி சொன்னால் உன் வீட்டின் முன்பு பால்டாயில் பாபு என போஸ்டர் ஓட்டுவேன் என்று மேடையிலேயே பகிரங்கமாக பேசி இருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை. 
 
 
இந்த விவகாரம் சூடு பிடித்ததை தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை என் வீட்டின் முன்பு போஸ்டர் ஓட்டுவேன் என கூறுகிறார்  முடிந்தால் அண்ணா சாலை பக்கம் அவரை வர சொல்லுங்கள் என்று அண்ணாமலைக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் சவால் விடுத்திருந்தார். 
 
இதனை தொடர்ந்து நேற்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்க வந்த அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்னொரு விஷயத்தை கூறி இருந்தார். 
 
 
அண்ணாமலை முடிந்தால் அண்ணா சாலைக்கு வர சொல்லுங்க என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அண்ணா சாலையில் எத்தனை மணிக்கு, எந்த இடத்திற்கு வரவேண்டும் என உதயநிதி ஸ்டாலினை சொல்ல சொல்லுங்க நான் தனி ஆளாக வருகிறேன் என பதில் கொடுத்தார்.
 
தொடர்ந்து பேசிய அவர், இன்று ட்விட்டரில் #GetOutModi என்று ஒரு தரப்பினர் பதிவு செய்து வருகிறார்கள். மறுபக்கம் பால்டாயில் பாபு என்று இன்னொரு தரப்பினர் பதிவு செய்து வருகிறார்கள். 
 
 
நான் திமுகவிற்கு சவால் விடுகிறேன். உங்களுக்கு நாளை காலை 6 மணி வரை நேரம் கொடுக்கிறேன். உங்களால் எந்த அளவுக்கு #GetOutModi என்று பதிவுகளை வெளியிட முடியுமோ. வெளியிடுங்கள். 
 
நாளை காலை 6 மணிக்கு நான் #GetOutStalin என்று பதிவை வெளியிடுகிறேன். எங்களுக்கு அடுத்த நாள் முழுதும் நேரம் இருக்கிறது. முதல் 24 மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு #GetOutModi என்று பதிவு செய்கிறீர்களோ. அதை கணக்கெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 
 
அடுத்த 24 மணி நேரத்தில் நாங்கள் #GetOutStalin என்று எவ்வளவு பதிவுகளை வெளியிடுகிறோம் என்பதை கணக்கெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒப்பிட்டு அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு முடிவை அறிவித்து விடலாம் என்று பேசி இருந்தார். 
 
அவர் சொன்னது போலவே இன்று காலை 6 மணிக்கு #GetOutStalin என்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவு தற்போது (21 பிப்ரவரி 2025 10:30 மணி) நிலவரப்படி 10 லட்சம் ட்வீட்டுகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 
 

ஆனால், #GetOutModi என்ற பதிவு இன்று அதிகாலை 06:00 மணி வரை மொத்தமாகவே 29 லட்சம் பதிவுகள் வந்திருந்தது. இப்படி படு சூடாக இரு தரப்பினருடைய விவாதங்கள் பறந்து கொண்டு இருக்க இடையில் இன்னொரு கூத்து ஒன்று நடந்திருக்கிறது. 
 
அது என்னவென்றால் மோடியும் வேண்டாம்.. ஸ்டாலினும் வேண்டாம்.. #GetOutModiandStalin இரண்டு பேரும் வெளியே போங்க என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த அரசியல் விளையாட்டு இணைய பக்கங்களை பரபரப்பாக்கி இருக்கிறது.