யூடியூபில் ஷாலினி ஸ்டோர்ஸ் என்ற சேனலில் ஷார்ட்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பிரசாத்.
பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் குறிப்பாக சக்திவேல் என்ற சீரியலில் ஹீரோயின் தங்கையான மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர்.
இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால், இவருடைய பெற்றோர்கள் திருமணம் செய்து கொண்டு கோயம்புத்தூரில் செட்டில் ஆகிவிட ரேஷ்மா பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான்.
இவருக்கு சிறு வயதில் இருந்து நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருந்திருக்கிறது. இவர் நடித்த கெட்டிமேளம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்றுக் கொடுத்தது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரேஷ்மா நடிக்க வாய்ப்பு கேட்டுச் சென்றாள் முதலில் படுக்கைக்கு சம்மதமா என்று தான் கேட்கிறார்கள். ஒரு சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் கூட படுக்கையை பகிர்ந்து கொள்ள சம்மதமா என்று வெளிப்படையாக கேட்கிறார்கள்.
எங்கே சென்றாலும் இதே கேள்விதான். இதனால் ஒரு கட்டத்தில் நான் ஆடிஷனுக்கு செல்லாமல் விட்டுவிட்டேன். அது மட்டும் இல்லாமல் நம்முடைய ப்ரொபைலில் கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகேவா இல்லையா என்ற ஆப்ஷனெல்லாம் வைத்திருக்கிறார்கள்.
நான் நோ என்று சொன்னதுமே என்னுடைய ப்ரொபைலை எடுத்து ஓரமாக வைத்து விட்டார்கள். அதன் பிறகு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுப் பார்ப்போம் என்று கேட்டால் படுக்கைக்கு சம்மதம் என்றால் பட வாய்ப்பு உண்டு என்று கூறுகிறார்கள்.
அந்த அளவிற்கு மோசமான பல சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன் என்று வேதனையாக கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர் நான் சிறுவயதிலேயே மனைவி போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்து விட்டதால் பலரும் என்னை பக்குவப்பட்ட பெண்ணாகவே பார்த்து பழகி விட்டார்கள்.
இதை நான் செய்த மிகப்பெரிய தவறு. யார் எனக்கு போன் செய்தாலும் இந்த நடிகருக்கு மனைவியாக நடிக்க வேண்டும்.. இத்தனை குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் உங்களுக்கு ஓகேவா..? என்று கேட்கிறார்கள்.
என்னை அப்படியான கதாபாத்திரத்துக்கு தான் லாயக்கு என்று அவர்களே முடிவு செய்து விட்டார்கள். ஒரு நல்ல குணசித்திர நடிகையாக வளர வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கான நடிகை என்ற அடையாளம் எனக்கு பிடிக்கவில்லை என பதிவு செய்திருக்கிறார் நடிகை ரேஷ்மா பிரசாத்.
0 கருத்துகள்