விஜய் டார்கெட் 1 கோடியே 30 லட்சம்.. அலறவிட்ட விஜய் - அதிர்ந்த திமுக.. வெறியேற்றி விஜயின் லேட்டஸ்ட் பேச்சு..!

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் வளர்ச்சிக்கு தீவிரமாக செயலாற்றி வருகிறார். 

அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைத்து களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

குறிப்பாக, த.வெ.க. தலைமையில் கூட்டணி அமையுமா அல்லது வேறு கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்பது போன்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாக மாறியுள்ளன. 

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நடிகர் விஜய்யின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர், விஜய் சமீபத்தில் மகளிர் தின வாழ்த்து வீடியோ வெளியிட்டதை சுட்டிக்காட்டி, அதில் விஜய் திமுக அரசை நேரடியாக தாக்கியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார். 

செய்யாறு பாலு மேலும் கூறுகையில், "நடிகர் விஜய், மகளிர் தின வாழ்த்து மூலம் ஒட்டுமொத்த பெண்களின் நம்பிக்கையையும் பெற முயற்சி செய்து வருகிறார். இது மக்கள் மத்தியில் வேலை செய்திருக்கிறதா என்று கேட்டால், நிச்சயமாக வேலை செய்துள்ளது. ஏனென்றால், நடிகர் விஜய்யின் பேச்சு நாட்டு நடப்புக்கு ஏற்றார் போல அமைந்திருக்கிறது. 

பெண்களின் பெருவாரியான வாக்குகள் நடிகர் விஜய்க்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுவாக ஆண் வாக்காளர்கள் கடைசி நேரத்தில் கூட யாருக்கு வாக்களிக்கலாம் என யோசிப்பார்கள். ஆனால், பெண்கள் ஒரு முறை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பார்கள். 

அத்தகைய பெண் வாக்காளர்களின் ஆதரவை விஜய் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை" என அடித்து கூறினார். மேலும், "நடிகர் விஜய் 2026 தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்குகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

அதுதான் அவருடைய இலக்காகவும் இருக்கிறது. இதுநாள் வரை திமுக என்ற பெயரை நேரடியாக சொல்லாமல் 'பாயாசம் அரசு' என்று விமர்சித்து வந்த விஜய், தற்போது நேரடியாகவே திமுக என்று அட்டாக் செய்யத் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்தடுத்த விஜய் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளில் திமுகவை நேரடியான தாக்குதல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்" என செய்யாறு பாலு தனது கணிப்பை பதிவு செய்திருக்கிறார்.

செய்யாறு பாலுவின் இந்த கருத்து, நடிகர் விஜய்யின் அரசியல் வியூகத்தை கூர்ந்து கவனிப்பதாக உள்ளது. பெண் வாக்காளர்களை குறிவைத்து விஜய் செயல்படுவது, அவருக்கு தேர்தலில் ஒரு பெரிய பலத்தை சேர்க்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

திமுக அரசை நேரடியாக விமர்சனம் செய்யத் தொடங்கி இருப்பது, விஜய் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார் என்பதையும், 2026 தேர்தலை குறிவைத்து அவர் காய்களை நகர்த்துவதையும் தெளிவுபடுத்துகிறது. 

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், அடுத்தடுத்த நகர்வுகளில் என்ன மாதிரியான வியூகங்களை கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்