1200 ஸ்க்ரீன்களுக்கு துண்டு போட்ட பூதம்.. சிக்கலில் வெற்றி லீடர்..!


வெற்றி லீடரின் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. அதே தேதியில் பூதம் நிறுவனம் தயாரித்து வரக்கூடிய டிவி நடிகர் நடிக்கும் திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது என்பது மிகப்பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது. 

நிலைமை இப்படி இருக்க டிவி நடிகரின் படத்திற்கு 1200 திரையரங்குகளை பதிவு செய்து துண்டு போட்டு வைத்திருக்கிறது பூதம் நிறுவனம் என்ற தகவல்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தை அதிகரித்து வருகிறது. 

மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது டிவி நடிகரின் திரைப்படம் என்றாலும் கூட வெற்றி லீடரின் படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. 

மட்டுமில்லாமல் வெற்றி லீடரின் அரசியல் நகர்வுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அவருடைய புதிய படத்தை குறைந்த அளவிலான திரையரங்குகளில் மட்டுமே வெளியிட முடியும் என்ற இக்கட்டான சூழலை உருவாக்க பூதம் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்று தகவல்கள் கசிந்து இருக்கிறது. 

1200 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்ட நிலையில்.. எஞ்சியுள்ள 200 முதல் 300 திரையரங்குகளில் மட்டுமே வெற்றி லீடர் நடிகரின் படம் வெளியாவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று உச் கொட்டுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.இ

தன் வெளிப்பாடாகத்தான் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாருக்கும் இல்லாத தடையை எங்களுக்கு போடுகிறார்கள் என்று புலம்பி தள்ளி இருக்கிறார் வெற்றி லீடர் நடிகர் என்றும் கூறுகிறார்கள்.

இப்படி செய்வது நேரடியாக பல்வேறு புரிதல்களை மக்கள் மத்தியில் உண்டு பண்ணும் என தெரிந்தும் அதை செய்வதற்கு பூதம் நிறுவனம் தயாராக இருக்கிறது என்று கூறுகிறார்கள். 

அதே நேரம் கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இன்னும் பத்து மாதம் கழித்து படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள் வெற்றிலீடர் தரப்பினர். இது ஏன் என்று புரியவில்லை. 

ஒரு வேலை தேர்தல் நெருக்கத்தில் படத்தை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தார்களோ என்னவோ..! ஆனால், அவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுகமான பிரச்சனைகளையும் சேர்த்து இந்த முடிவு கொண்டு வந்திருக்கிறது. 

வெளியீட்டின் போது என்ன கூத்து நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Post a Comment

Previous Post Next Post