கன்னியாகுமரி தக்கலை பகுதியில் தன்னுடைய இரண்டு மகள்களை காணவில்லை என்று தாயார் காவல்துறையில் புகார் கொடுக்கிறார்.
இரண்டு சிறுமிகளின் தொலைபேசியும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. எங்கே சென்றார்கள்.. ஏது சென்றார்கள்.. என்று குழம்பி போன போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் இருவரும் ஒரு இளைஞனுடன் பைக்கில் ஏறி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருக்கிறது.
அந்த இளைஞர் தேடிப்பிடிக்கும் அளவுக்கு காவல்துறையினருக்கு கஷ்டம் எதுவும் இல்லை. ஏனென்றால், அவர் ஊர் அறிந்த பிரபலமான வழக்கறிஞர்களில் ஒருவர். அவருடைய பெயர் அஜித்குமார்.
இரண்டு சிறுமிகளையும் அழைத்துச் சென்று தன்னுடைய அலுவலகத்தில் வைத்து விடிய விடிய சீரழித்திருக்கிறார். சரி, இந்த இரண்டு சிறுமிகளுக்கும் அந்த வழக்கறிஞருக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது..? என்று விசாரித்த போது தான் இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இரண்டு சிறுமிகளின் தாயும் தந்தையும் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு தகராறு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கணவன் மனைவி சண்டை ஒரு கட்டத்தில் காவல் நிலையத்திற்கு சென்று இருக்கிறது.
காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது. அப்போது, உங்களுக்கு விவாகரத்து வாங்கி கொடுக்கிறேன் என்று சிறுமிகளின் தாயாருக்கு அறிமுகமானவர்தான் இந்த அஜித்குமார்.
ஆரம்பத்தில் நல்லவர் போல பழகி வந்த அஜித்குமார் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய ஆசைக்கு அந்த இரண்டு சிறுமிகளையும் இறையாக்க திட்டம் தீட்டி இருக்கிறார்.
அதன் அடிப்படையில் அவர்களிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி அவருடைய அலுவலகத்துக்கே அழைத்துச் சென்று நாசம் செய்திருக்கிறார். இந்த காமக்கொடூரன் அஜித்குமார்.
இதோடு விடவில்லை. அந்த இரண்டு சிறுமிகளையும் தன்னுடைய நண்பர்களுக்கும் விருந்தாக்கும் வகையில், இருவரையும் பஸ் ஏற்றி தன்னுடைய நண்பர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். விசாரணையில் சிறுமிகள் எங்கே என்று கேட்டபோது இந்த உண்மையை உளறி இருக்கிறார் வக்கீல் அஜித்குமார்.
இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. இன்னும் ஒரு கூத்து என்னவென்றால் மார்ச் மாதம் 16ஆம் தேதி இந்த அஜித் குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்துள்ளது.
அந்த திருமணத்திற்காக ஏற்பாடுகள் குடும்பத்தினர் செய்து கொண்டு இருக்க மறுபக்கம் இந்த இரண்டு சிறுமைகளை சீரழித்து போக்சோ வழக்கை வாங்கி இருக்கிறார் இந்த அஜித்குமார்.
இதனை தொடர்ந்து 16 ஆம் தேதி நடக்க இருந்த அவருடைய திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.