சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கியது.
ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய உடனேயே நயன்தாராவுக்கும், உதவி இயக்குனர் ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் என்னவென்றால், படப்பிடிப்பின்போது நயன்தாரா அந்த உதவி இயக்குனரை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதைக் கேள்விப்பட்ட இயக்குனர் சுந்தர் சி உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, நயன்தாராவை வைத்து தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று கோபப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த விவகாரத்தில் தலையிட்டு நயன்தாராவுடன் சமரசம் செய்துள்ளார். அதன் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், சுந்தர் சி நயன்தாராவை படத்திலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்கலாம் என்று கூறியதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.
ஆரம்பத்திலேயே இப்படியான மோதல் ஏற்பட்டிருப்பதால், படப்பிடிப்பு தொடர்ந்து சுமூகமாக நடைபெறுமா என்ற கவலை தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால், நயன்தாரா இந்த படத்தில் தொடர்ந்து நடிப்பாரா அல்லது அவருக்கு பதிலாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்படுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக நயன்தாரா தனுஷுடனான மோதல் உட்பட பல சர்ச்சைகளில் சிக்கி வருவது அவரது இமேஜை பாதித்துள்ளது. தற்போது சுந்தர் சியுடனான இந்த மோதல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நயன்தாரா 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தமன்னா நடிக்க ஒப்பந்தமாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், இது வெறும் தகவலா அல்லது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.