மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தினுடைய படப்பிடிப்பு பூஜை போட்டதிலிருந்து சர்ச்சை மேல் சர்ச்சை வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் புதிய சர்ச்சையாக மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது என்றும் நடிகை நயன்தாராவை மாற்றிவிட்டு தமன்னாவை ஹீரோயினாக போட இருக்கிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதனை நம்முடைய தளத்திலும் பார்த்து இருந்தோம். இந்நிலையில், நடிகை நயன்தாரா சுந்தர் சி-ன் உதவி இயக்குனர் ஒருவரை கடினமாக திட்டி விட்டார் என்றும் அவர் படத்தின் ஹீரோயின் என்றாலும் என்னுடைய உதவி இயக்குனரை திட்டுவதற்கு அவருக்கு என்ன உரிமை கிடையாது.
எப்படி என்னுடைய உதவியை இயக்குனரை அவர் திட்டலாம்..? என்று இயக்குனர் சுந்தர் சி படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பி சென்று விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளம்பி இருக்கின்றன.
சூழல் கடந்த ஒரு வருட காலமாக பார்க்க முடிகிறது. இந்நிலையில், பல வெற்றி படங்களை இயக்குனர் இயக்கிய இயக்குனர் சுந்தர் சிக்கே இந்த நிலைமையா என்று சொல்லும் அளவுக்கு இந்த சம்பவம் அரங்கே இருக்கிறது.
இந்நிலையில், நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அது என்னவென்றால்.. இந்த படத்தின் பூஜையில் இருந்தே பல்வேறு பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் கண் திருஷ்டி அதனால்தான் இந்த படத்திற்கு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்பது போல ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை பதிவிட்டு இருக்கிறார் நடிகை குஷ்பு.
இது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக அமைந்திருக்கிறது. அப்படி என்ன பெரிய படத்தை எடுக்கிறீர்கள் கண்திருஷ்டி பட்டுவிட்டது. கண் திருஷ்டி படுகிறது என்றால் ராஜமவுலி இயக்கும் படங்களின் மீது தான் கண் திருஷ்டி பட வேண்டும். அவ்வளவு பெரிய படமே எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியாகி விட்டது.
நீங்கள் என்னவென்றால் ஏற்கனவே வெளியான ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறேன் என்று ஒரு குழுவைத் திரட்டி கொண்டு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு என்ன கண்திருஷ்டி வந்தது என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க நடிகை நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதற்காக விரதம் இருக்கிறார், காலணி அணிவதில்லை, அசைவம் சாப்பிடுவதில்லை, என்றெல்லாம் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் படப்பிடிப்பு தளத்திலேயே நடிகை நயன்தாரா அசைவ உணவு எல்லாம் சாப்பிட்டு இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
இந்த தகவல்கள் எதுவும் படக்குழு தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து தொடர்ந்து இப்படியான குற்றச்சாட்டுகள் வெளியாகி வருவது நடிகை குஷ்பூ சொல்வது போல ஒருவேளை கண்திருஷ்டி ஆக கூட இருக்குமோ..? என்று சொல்லும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.