BIKINI-ல் அந்த உறுப்பை தடவி.. புருஷனை தவிர எல்லாரும் படுக்க.. பச்சை பச்சையா பேசுவேன்..


மலையாள சினிமாவில் நிலவும் பாலியல் தொல்லைகள் குறித்து பல நடிகைகள் தொடர்ந்து வெளிப்படையாக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

அந்த வரிசையில், நடிகை ஷகீலாவும் மலையாள சினிமாவில் நடந்த பல அத்துமீறல்களை சமீபத்திய பேட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார். 

ஷகீலா அந்த பேட்டியில் கூறுகையில், "மலையாள சினிமாவில் மட்டும் அட்ஜெஸ்ட்மெண்ட் (சமரசம்) நடக்கவில்லை, தமிழ் சினிமாவிலும் நடக்கிறது. அதைவிட தெலுங்கு சினிமாவில் அதிகமாக நடக்கிறது. 

அந்த அறிக்கையில் குடித்துவிட்டு கதவை தட்டுவார்கள் என்று கூறியிருப்பது உண்மைதான். ஒரு படத்தில் நான் நடிக்கும் போது நடிகை ரூபஸ்ரீ கதாநாயகியாக நடித்திருந்தார். 

அப்போது நைட் அந்த நடிகையின் ரூம் கதவை 4 பேர் குடித்துவிட்டு தட்டி ரகளை செய்தார்கள். அதை பார்த்து நான் அவர்களை தட்டிக்கேட்டேன். பாலியல் ரீதியான பிரச்சனையை மலையாள சினிமாவில் சந்தித்த முதல் நபர் நான் தான்." என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 

தொடர்ந்து தனது சொந்த அனுபவத்தையும் பகிர்ந்த ஷகீலா, "முதல் படத்திற்கு எனக்கு மேக்கப் போட்ட ஒருவர் நான் பிகினி அணிந்து இருந்தபோது எங்கே எல்லாம் தொட்டார் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும்.

 'கோல்மால்' என்ற படத்தில் காஸ்டியூம் டிசைனர் என் வீட்டிற்கு வந்து அளவு எடுத்து அசிங்கமாக என்னிடம் நடந்துகொண்டதாகவும்" தெரிவித்தார். சமீபத்தில் ஒரு அறிமுக நடிகை ஷகீலாவின் பேட்டி ஒன்றில், "சினிமாவில் நடிக்க வந்த பிறகு புருஷனை தவிர எல்லாருமே படுக்க கூப்பிடுறாங்க" என்று கதறி அழுத சம்பவத்தையும் ஷகீலா குறிப்பிட்டார். 

இதற்கு பதிலளித்த ஷகீலா, "அவ்வளவு கஷ்டமா இருந்தா நீங்க எதுக்கு சினிமாவில் நடிக்க வந்தீங்க? பேசாம வேற ஏதாவது வேலைக்கு போகலாமே" என்று அந்த நடிகைக்கு அறிவுரை கூறியதாக தெரிவித்தார். 

இதனை குறிப்பிட்டு பேசிய பிரபல மருத்துவர் காந்தராஜ், "சினிமா நடிகைகள் தங்களைப் பற்றி சர்ச்சையை கிளப்புவதே, 'எனக்கு இன்னும் டிமாண்ட் இருக்கு.. பாத்திங்களா என்னை எத்தனை பேர் படுக்க கூப்பிடுறாங்கன்னு' என்று தங்களுக்கு தாங்களே விளம்பரம் செய்து கொள்வது தான் அவர்களின் நோக்கம். 

இதே ஷகீலா, பிகினி உடையில் தனக்கு மேக்கப் போடும் போது தொடக்கூடாத உறுப்பை எல்லாம் தொட்டு மேக்கப் போட்டு தொந்தரவு கொடுத்தார்கள் என்று கூறினார். 

இன்னும் பச்சை பச்சையா எவ்வளவோ பேசலாம்" என்று காட்டமாக தெரிவித்தார். ஷகீலாவின் இந்த வெளிப்படையான பேச்சும், மருத்துவர் காந்தராஜின் கருத்தும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 

நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் மற்றும் அதனை அவர்கள் வெளிப்படுத்தும் விதம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post