அக்கா என்று கூட பார்க்காமல்.. சொந்த தம்பியே.. ஸ்டூடியோவில் முடங்கிய பானுப்பிரியா..


மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்திய பேட்டி ஒன்றில், இப்போதுள்ள நடிகைகள் தங்கள் எதிர்காலத்தை நன்கு திட்டமிடுவதாகவும், கல்வியறிவு மற்றும் சமூகப் பார்வை காரணமாக வலுவான பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி பெரிய சிக்கல்களில் சிக்காமல் தப்பிப்பதாகவும் தெரிவித்தார். 

அதே நேரத்தில், முந்தைய தலைமுறை நடிகைகள் பலர் போதிய திட்டமிடல் இல்லாமல் வறுமையில் வாடியதையும் அவர் சுட்டிக்காட்டினார். BBT Cinema யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பாண்டியன் கூறியதாவது: "பானுப்பிரியாவின் தம்பி அக்கா என்று கூட பார்க்காமல்.. அவரது முழு சொத்தையும் அபகரித்துக்கொண்டார். 

கடைசியில் அனைத்து சொத்தையும் இழந்து பானுப்பிரியா ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு அறையில் தங்கியிருந்ததாக கேள்விப்பட்டேன். ஒரு காலத்தில் தமிழகத்தின் கனவுக்கன்னியாக திகழ்ந்த பானுப்பிரியாவுக்கு அந்த நேரத்தில் எவ்வளவு மன உளைச்சல் இருந்திருக்கும்? அதே நிலைமைதான் சாவித்திரிக்கும் ஏற்பட்டது. 

கடைசி காலத்தில் ஜெமினி கணேசன் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. வறுமையில் வாடி சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி வேதனையிலேயே இறந்துவிட்டார். இப்படி பல நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உலகமே தெரியாது. பிஸியாக நடிக்கும்போது எவ்வளவு பணம் வருகிறது, எவ்வளவு செலவாகிறது என்று தெரிவதில்லை. 

அரசியலுக்கு வராவிட்டால் ஜெயலலிதாவுக்கும் இதே நிலைமைதான். எவ்வளவு பணம் வருகிறது, எவ்வளவு செலவாகிறது என்று தெரியாமல் அவர் நிலைமையும் அப்படித்தான் இருந்தது. அரசியலுக்கு மட்டும் வராமல் போயிருந்தால் பானுப்பிரியா, சாவித்திரி போலத்தான் ஜெயலலிதாவுக்கும் துயரம் வந்திருக்கும். 

பானுப்பிரியா போல பல உச்சபட்ச நடிகைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. பொருளாதாரத்தை கட்டமைக்கக்கூடிய எந்த வழியும் அவர்களுக்கு தெரியவில்லை. அதன் விளைவு வறுமைதான் அவர்களுக்கு பெரிய நோயாகிறது. அந்த வறுமையை வெற்றி பெற அதிகமாக சிந்திக்கிறார்கள். தங்களை காப்பாற்றிக்கொள்ளவும், மரணம் அடையும் வரை வருமானத்தை தேட பாடுபடுகிறார்கள்.

பட வாய்ப்பு இல்லாமல், வயதும் கடந்துவிட்ட நிலையில் வருமானத்துக்கு தவிக்கிறார்கள். வீடு இல்லாமல், உணவுக்கு வழியின்றி, உதவியாளர்களுக்கு சம்பளம் இல்லாமல், வேலைக்காரர்களுக்கு சம்பளம் தரமுடியாமல், வாடகை காருக்குக்கூட காசு இல்லாமல் பல நடிகைகள் இருக்கிறார்கள். இதுவே அவர்களுக்கு நோயாக மாறிவிடுகிறது. 

எல்லாரையும் சிரிக்க வைத்த மனோரமா, தன் மகனை வைத்து படம் எடுத்தும் சோபிக்கவில்லை. இளம் வயதில் கணவரை பிரிந்து அந்த சோகத்தை மறைத்துதான் வாழ்நாள் எல்லாம் வாழ்ந்தார். கடைசியில் துயரற்று வேதனையிலேயே இறந்துவிட்டார். 

இதே நிலைமைதான் பானுப்பிரியாவுக்கும். வாழும்போதே பொருளாதார கட்டமைப்புகளை நடிகைகள் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் எல்லாம் எதார்த்த உலகம் தெரியாமல் வாழ்ந்துவிட்டதுதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால் இப்போதுள்ள நடிகைகள் தங்கள் எதிர்காலத்தை சரியாக திட்டமிடுகிறார்கள். 

கல்வியறிவு, சமூகப்பார்வை போன்றவை இன்றைய நடிகைகளுக்கு இருப்பதால் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தி கொள்கிறார்கள். குஷ்புவுக்கு பல கோடிக்கு சொத்து உள்ளது. நயன்தாராவுக்கு 50 தலைமுறைக்கு சொத்து உள்ளது. அம்பிகா, ராதா எங்கே போனாலும் ஸ்டார் ஓட்டல்களை வைத்திருக்கிறார்கள். மீனாவுக்கும் சொத்து உள்ளது. 

இவர்களில் தப்பிப் பிறந்தது பானுப்பிரியாதான்" என்று பாண்டியன் வேதனையுடன் தெரிவித்தார். பாண்டியனின் இந்த கருத்துக்கள் முந்தைய தலைமுறை நடிகைகளின் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், இன்றைய நடிகைகள் எதிர்காலத்தை திட்டமிடுவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--