ஒரு நூல்ல மிஸ் ஆகிடுச்சு.. நீங்க போட்டதுல இது தான் செக்ஸியான ட்ரெஸ்.. பாலிவுட்டில் ராஷ்மிகா கவர்ச்சி தாண்டவம்..!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'சிக்கந்தர்'. இப்படம் வருகிற மார்ச் 28-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் புஷ்பா மற்றும் அனிமல் படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். 

சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். 'சிக்கந்தர்' படத்தின் பாடல்களுக்கு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இதுவரை வெளியான 'ஜோரா ஜபின்' மற்றும் 'பம் பம் போலே' ஆகிய பாடல்களில் சல்மான் மற்றும் ராஷ்மிகா இடையேயான கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது 'சிக்கந்தர் நாச்சே' என்ற டைட்டில் ட்ராக் பாடலின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் சல்மான் கானும், ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து செமையாக நடனமாடியுள்ளனர். 

சல்மான் கான் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த 23 வினாடி டீசரை வெளியிட்டுள்ளார். டீசரில் சல்மான் கான் மிகவும் மாஸாக காட்சியளிக்கிறார். ராஷ்மிகா மந்தனா வெள்ளை நிற உடையில் தேவதை போல் அழகாக நடனமாடுகிறார். 

இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சல்மான் கானின் இந்த லுக் அவரது முந்தைய படமான 'டைகர்' படத்தில் இருந்ததைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். 

குறிப்பாக, சல்மான் கருப்பு நிற உடையில் ஒரு பார்ட்டிக்கு வருவது 'ஏக் தா டைகர்' (2012) படத்தில் வந்த காட்சி போல உள்ளதாக கூறுகின்றனர். 

மேலும், இந்த பாடலின் டீசரைப் பார்த்த பலரும் இது சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடித்த 'ஏக் தா டைகர்' படத்தில் இடம்பெற்ற 'மாஷா அல்லாஹ்' பாடலின் சாயலில் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

ஒரு சிலர் இது விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'அரபிக் குத்து' பாடலை நினைவுபடுத்துவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'சிக்கந்தர்' திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், இப்படம் வருகிற மார்ச் 28-ந் தேதி திரைக்கு வரவுள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இப்படத்திற்காக காத்திருக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post