நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகம்' திரைப்படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, இந்த படத்தில் இயக்குனர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
'ஜனநாயகம்' திரைப்படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த செய்தி. தற்போது இந்த படத்தில் அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் விஜய்யிடம் கேள்வி கேட்கும் காட்சிகளில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
.jpg)
குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. என் மார்பில் அதற்கு எதிராக.. இயக்குனர் டார்ச்சர்... போட்டு உடைத்த காஜல் அகர்வால்..!
இந்த செய்தி வெளியானதில் இருந்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்தில் மூழ்கி உள்ளனர். மூன்று முன்னணி இயக்குனர்கள் விஜய்யின் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பது இதுவே முதல் முறை என்பதால், இந்த அப்டேட் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இந்த செய்தியை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, டிராகன் பிரதீப் ரங்கநாதனின் வீடியோ ஒன்றை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் டிராகன் படத்தில் வரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் சொல்லக்கூடிய "இந்த மகிழ்ச்சி குறித்து உங்களுக்கு சொன்னா புரியாது சார்..." என்ற தனது பிரபலமான வசனத்தை பேசி இந்த அப்டேட்டை கொண்டாடி உள்ளார். ரசிகர்களும் இதே வசனத்தை பயன்படுத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகிய மூன்று முன்னணி இயக்குனர்களும் விஜய்யின் படத்தில் இணைந்து கேமியோ ரோலில் நடிப்பது, 'ஜனநாயகம்' படத்திற்கு மேலும் ஒரு ஹைப்பை கூட்டியுள்ளது.
இந்த இயக்குனர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளதால், இந்த செய்தி படத்தின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. 'ஜனநாயகன்' திரைப்படம் ஏற்கனவே விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம்.
#Jananayagan First On EXCLUSIVE 🔥🔥#Atlee - #LokeshKanagaraj - #Nelson Cameo In #Jananayagan 🔥🤩
— MAHI 𝕏 (@MahilMass) March 8, 2025
They are doing reporters role and asking questions to #ThalapathyVijay 😂🔥 Like When is #LEO2 & when is #Thalapathy70 😂😂
pic.twitter.com/LYEloIenhQ
தற்போது இந்த அப்டேட் மூலம், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த படம் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஒரு முக்கிய படமாக அமையும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.