பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்திய பேட்டியில் பிரபல அரசியல் வியூக நிபுணர் தற்போது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிரசாந்த் கிஷோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க சென்ற போது என்ன நடந்தது என்ற ரகசியத்தை பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, அதிமுகவை ஜெயிக்க வைக்கிறேன் என்று பிரசாந்த் கிஷோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க சென்றிருக்கிறார், அப்போது ஜெயலலிதா கேட்ட ஒரே கேள்வி, நீங்கள் எப்படி எங்கள் கட்சியை ஜெயிக்க வைப்பீர்கள்..? என்பது தான்.
இதற்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர், நாங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் புள்ளி விவரங்களை சேகரிப்போம், என்ன ஜாதி வாக்காளர்கள் என்ன ஜாதி வேட்பாளருக்கு வாக்கு செலுத்துகிறார்கள், என்ன தொழில் செய்பவர்கள் என்ன கட்சிக்கு வாக்கு செலுத்துகிறார்கள், அதிமுகவின் பலம் என்ன..? அங்கு இருக்கக்கூடிய எதிர்க்கட்சியின் பலம் என்ன..? பலவீனம் என்ன..? போன்ற விபரங்களை சேகரிப்போம்.
இதன் அடிப்படையில், எந்த தொகுதியில் உங்கள் கட்சி தோற்கும் நிலையில் இருக்கிறது.. என்பதை முதலில் கண்டறிவோம். அதன் பிறகு எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கிறதோ.. அந்த தொகுதிகளில் கவனம் செலுத்துவோம்.
அங்கே என்னென்ன செய்ய வேண்டும்..? என்னென்ன செய்தால் வாக்குகளை பெற முடியும்..! போன்ற நுட்பங்களை நாங்கள் சொல்வோம் என்று கூறியிருக்கிறார்.
இதை கேட்ட ஜெயலலிதா, இந்த விபரத்தை என்னுடைய கட்சியின் மாவட்ட செயலாளரே கொடுத்து விடுவார். இத்தனை ஆண்டுகளாக எங்களுடைய கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் மாவட்ட செயலாளருக்கு தெரியாத ஒரு விஷயம் நாங்கள் கொடுக்கும் டேட்டா மூலம் உங்களுக்கு தெரிந்து விடப் போகிறதா..?
என்னை சந்திக்க வருவதற்கு முன்பு திமுகவை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள்.. அவர்களிடம் இந்த டேட்டாவை வாங்கிக் கொள்வீர்கள்.. என்னிடம் வந்து பேசுகிறீர்கள்,. எங்களுடைய கட்சியின் டேட்டாவை வாங்கிக் கொள்வீர்கள். கடைசியாக யார் உங்களுக்கு அதிகமாக பணம் கொடுக்கிறார்களோ அங்கே போய் சேர்ந்து கொண்டு அந்த டேட்டாவை விற்று விடுவீர்கள்.. இதுதானே உங்கள் வேலை..? அதற்கு நான் தயாராக இல்லை..!
இது என் கட்சி.. இது என் நாடு.. இது என்னுடைய மக்கள் சார்ந்தது.. வெற்றியோ தோல்வியோ.. அதனை எங்கள் கட்சி எங்கள் கட்சி நிர்வாகிகளை பார்த்துக் கொள்வார்கள்.. நீங்கள் கிளம்பலாம் என்று பொட்டில அடித்தார் போல பேசி பிரசாந்த் கிஷோரை அனுப்பி இருக்கிறார்.
இந்த விஷயத்தை பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.