அந்த நேரத்தில் கூட பாலியல் தொந்தரவு.. குழந்தை இல்ல.. நடிகை வரலட்சுமி சரத்குமார் கதறல்..!


சிம்புவுடன் "போடா போடி" படத்தில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 

சமீபத்தில் இவர் நடிப்பில் 13 வருடங்களுக்கு முன் உருவாகி இருந்த "மதகஜராஜா" திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

கடந்த ஆண்டு தனது காதலர் நிகோலாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட வரலட்சுமி, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "டான்ஸ் ஜோடி டான்ஸ் Reloaded 3" நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 

போட்டியில் பங்கேற்று வரும் கெமி என்ற போட்டியாளர், தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

இதனைப் பார்த்த நடுவர் வரலட்சுமி சரத்குமாரும் மிகவும் மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுதார். "எனக்கும் சின்ன வயதில் இப்படி நடந்திருக்கிறது" என்று கூறிய அவர், "நானும் உன்ன மாதிரிதான். அப்பா, அம்மா வேலைக்கு போயிடுவாங்க. 

மத்தவங்க வீட்டுல விட்டு போயிடுவாங்க. நான் சின்ன வயசா இருக்கும் போது 5, 6 பேர் என்னிடம் தப்பா நடந்துகிட்டு இருக்காங்க.. நானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளேன்.." என்று தனது வேதனையை பகிர்ந்து கொண்டார். 

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசிய வரலட்சுமி, "எனக்கு குழந்தை இல்ல. ஆனா நான் எல்லா பெத்தவங்களுக்கும் சொல்ற விஷயம், உங்க குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என்னன்னு சொல்லிக்கொடுங்க" என்று கண்கலங்கியபடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

Post a Comment

Previous Post Next Post