"மூக்குத்தி அம்மன் 2" படத்தை சுற்றி பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், நடிகை குஷ்பு "படப்பிடிப்பு நன்றாக நடக்கிறது. இதெல்லாம் கண் திருஷ்டிதான்" என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது கருத்தை தெரிவித்துள்ளார். செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "மூக்குத்தி அம்மன் 2 பட விவகாரம் இன்னும் ஓயவில்லை.
முதல் நாள் ஷூட்டிங்கில் உதவி இயக்குனரை நயன்தாரா திட்டியதாகவும், சுந்தர் சி கோபப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. உடனே குஷ்பு, இதெல்லாம் கண் திருஷ்டி என்று கூறினார்.
அப்படி கண் திருஷ்டி இருந்தால் ராஜமௌலி படங்கள் மீதுதான் விழ வேண்டும். அன்றைய காலத்தில் அம்மன் படங்களில் நடித்த கே.ஆர். விஜயா போன்ற நடிகைகள் விரதம் இருந்தார்கள்.
ஆனால், மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு கண் திருஷ்டியோ, சாமி குத்தமோ எதுவும் கிடையாது. அங்கு நடந்தது ஈகோ பிரச்சினைதான். பூஜையில் மீனாவை நயன்தாரா அவாய்ட் செய்ததாகவும், அதற்கு மீனா 'ஆட்டுமூளைக்காரர்கள்' என்று பதிவு போட்டதாகவும் கூறினார்கள்.
ஆனால், அந்த கோபம் மீனா மீது இல்லை, ரெஜினா மீதுதான் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் வெளியான 'விடாமுயற்சி' படத்தில் திரிஷாவை விட ரெஜினாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததை பலரும் பாராட்டினார்கள்.
இந்த விமர்சனத்தை நயன்தாராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று அவர் சொன்னாலும், அந்த குணம் அவரிடம் இருக்கிறது.
அதன் வெளிப்பாடுதான் இது" என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். இவ்வாறு "மூக்குத்தி அம்மன் 2" படத்தை பற்றிய வதந்திகளுக்கும், குஷ்புவின் விளக்கத்திற்கும், செய்யாறு பாலுவின் கருத்துக்கும் இடையே நிலவும் முரண்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எது உண்மை என்பது பட வெளியீட்டிற்கு பிறகே தெரியவரும்.