கல்யாண பெண்ணை காரில் கடத்தி திருமணம்..! குழந்தை பிறந்த பிறகும் அந்த நடிகை மீது ஆசை..!


பிரபல நடிகர் முரளி மிகவும் நல்லவர், பண்பானவர், அனைவரிடமும் மரியாதையாக பழகக்கூடியவர் என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் புகழ்ந்துள்ளார். 

மேலும், நடிகர் டேனியல் பாலாஜிக்கு முரளி சினிமா வாய்ப்புகள் பெற்றுத் தராதது ஏன் என்பது குறித்தும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

Realone Media யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சபிதா ஜோசப் கூறுகையில், "நடிகர் முரளியின் தீவிர ரசிகர் ஒருவர் 'கடவுள் முரளி வாழ்க' என்று சுவரெல்லாம் எழுதி கொண்டேயிருந்தார். 

சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள சுவற்றில் எழுதப்பட்டிருந்ததை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். முரளி மீது அவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் ரசிகர்கள்." முரளியின் தந்தை கன்னடத்தில் பிரபலமான இயக்குனர். முரளி தனது தந்தையிடமே உதவி இயக்குனராக பணியாற்றினார். பிறகு தந்தையின் படத்திலேயே நடிக்கத் தொடங்கினார். 

அந்த சமயத்தில்தான், கே.பாலச்சந்தர் தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் "பூவிலங்கு" படம் தயாராகி கொண்டிருந்தது. கன்னட படத்தில் முரளியை பார்த்தவுடன் அமீர்ஜானுக்கு அவரை மிகவும் பிடித்துப்போனது. அப்படித்தான் முரளி "பூவிலங்கு" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

பெங்களூரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை முரளி காதலித்து வந்தார். ஆனால், இருவரது பெற்றோர்கள் தரப்பிலும் திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கவில்லை. 

ஒருநாள் திடீரென காரிலேயே அந்த பெண்ணை கடத்தி வந்து, சென்னையில் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதேபோலத்தான் நடிகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் தனது மனைவியை கடத்தி வந்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முரளியும் தனது காதலியை கடத்தி வந்து திருமணம் செய்த பிறகு, இரு குடும்பத்தினரும் அவர்களை ஏற்றுக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு வளசரவாக்கத்தில் வீடு வாங்கி தனது மனைவியை சிறப்பாக வாழ வைத்தார் முரளி. 

சபிதா ஜோசப் மேலும் கூறுகையில், "மது அருந்திவிட்டால் நிறைய பேர் தங்களது இயல்பை மறந்துவிடுவார்கள். 'மணிக்குயில்' படப்பிடிப்பின்போது முரளி, நடிகை சிவரஞ்சனியை காதலிக்கத் தொடங்கினார். அப்போது முரளிக்கு திருமணமாகி குழந்தைகள் கூட இருந்தார்கள். 

ஆனால், சிவரஞ்சனி அந்த காதலை நிராகரித்துவிட்டார். அந்த சமயத்தில் முரளி நிறைய மது அருந்திவிட்டு படப்பிடிப்பில் சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தினார். புதுப்புது ஹீரோக்கள் வந்தபோது, முரளிக்கான பட வாய்ப்புகளும் ஒரு கட்டத்தில் குறைந்து போனது." 

நடிகர் டேனியல் பாலாஜி முரளியின் தம்பிதான் என்றாலும், முரளி அவரை சினிமா வாய்ப்புகளுக்கு கை தூக்கி விடவில்லை. இது குறித்து பேசிய சபிதா ஜோசப், "அஜித் தனது மைத்துனர் ரிச்சர்டுக்கும் கை கொடுக்கவில்லை. விஜய் தனது தம்பி விக்ராந்த்துக்கும் உடனடியாக பெரிய அளவில் உதவவில்லை. 

தங்கள் குடும்பத்தினருக்கு உதவி செய்தால், அதையும் சிலர் விமர்சிப்பார்கள் என்பதால் அவர்கள் உதவிகளை செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால், முரளி மிகவும் நல்லவர், மிகவும் தன்மையான குணம் கொண்டவர். 

அனைவரிடமும் கனிவாகவும் மரியாதையாகவும் பேசக்கூடியவர்" என்று தெரிவித்தார். சபிதா ஜோசப்பின் இந்த கருத்துக்கள் நடிகர் முரளியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரையுலக பயணம் குறித்த பல புதிய தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.

Post a Comment

Previous Post Next Post