தென்னிந்திய சினிமாவில் பி கிரேடு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷகீலா, தற்போது "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் மூலம் "ஷகீலா அம்மா" என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
பலருக்கும் உதவிக்கரம் நீட்டி வரும் ஷகீலா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது உறவினர்களால் அவமானப்படுத்தப்பட்ட ஒரு வேதனையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஷகீலா அந்த பேட்டியில் கூறியதாவது, "என் அக்கா மகன் திருமணத்திற்கு எனக்கு பத்திரிக்கை கொடுத்து புடவை கொடுத்து வரச்சொன்னாங்க. நானும் சந்தோஷமா மேடைக்கு போனேன்.
ஆனா அங்க கல்யாணப் பொண்ணு மேடைல இல்ல. என்னை கீழ உட்காரச்சொன்னாங்க. எங்க சொந்தக்காரங்க எல்லாரும் வந்திருந்தாங்க. 10 நிமிஷத்துக்கு பின் நான் கீழே இறங்கி அப்படியே காருக்கு போகலாம்னு நினைச்சேன்.
அப்போ அந்த பொண்ணு மேல வருது. என் அக்கா பையன எம் ஆர் படிக்க வெச்சதே நான் தான். நான் கொடுத்த கிஃப்டை அந்த பொண்ணு வலது கையால வாங்கிட்டு இடது கையால அங்க இருந்தவங்ககிட்ட கொடுத்து என்னை யாருன்னுகூட அறிமுகம் செஞ்சு வெக்கல.
இதை பார்த்ததும் எனக்கு மேடையிலே அழுக வந்துிருச்சு." மேலும் அவர் கூறுகையில், "நான் அப்படியே மேடையிலிருந்து இறங்கி காருக்கு போனேன். அப்போ பின்னாடியே சொந்தக்காரங்க வந்தாங்க. 'செருப்பாலயே அடிப்பேன்'னு சொல்லி நான் காருக்குள்ள ஏறிட்டேன்.
எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு. இதை சொல்ல நான் கூச்சப்படல.. ரொம்ப தனிமையா உணர்ந்தேன். தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு மிகவும் மோசமானது. பக்கத்துல பீச் இருந்துச்சு. அங்க போய் நான் ஒரு நம்பருக்கு கால் பண்ணேன். அது வேற யாருமில்ல, நடிகர் ரிச்சர்ட் தான். எனக்கு மனப்பாடமா ஒரே ஒருத்தர் நம்பர் தான் தெரியும்னா அது அவர் நம்பர் தான்.
அவர் உடனே அங்க பக்கத்துல இருந்து வந்து எனக்கு ஆறுதல் சொன்னாரு அந்த கொடூரமான தனிமையை போக்க உதவினார் என்று அந்த வேதனையான தருணத்தை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். பலருக்கும் உதவி செய்து வரும் ஷகீலாவுக்கே அவரது சொந்தக்காரர்கள் மத்தியில் இப்படி ஒரு அவமானம் நேர்ந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஷகீலாவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருவதுடன், உறவினர்களின் இந்த செயலுக்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
திரையுலகில் பல இன்னல்களை சந்தித்த ஷகீலா, சொந்த குடும்பத்திலேயே இப்படி ஒரு அவமானத்தை சந்தித்தது மிகவும் வேதனை அளிக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரிச்சர்ட் உடனடியாக வந்து அவருக்கு ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.