விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "சிறகடிக்க ஆசை" சீரியலின் இன்றைய (மார்ச் 19, 2025) எபிசோட் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் நிறைவடைந்தது.
மனோஜியின் பிறந்தநாளை ரோகிணி சர்ப்ரைஸ் ஆக கொண்டாடியதும், மனோஜுக்கு உதவ முத்து ஒரு முக்கிய முடிவு எடுத்ததும் இன்றைய எபிசோடின் ஹைலைட்டாக இருந்தது.
போலி சாமியாரை நம்பி ஏமாந்த மனோஜ்
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், மனோஜை ஏமாற்றிய கதிரை கண்டுபிடிப்பதற்காக பார்வதி போலி சாமியார் ஒருவரை அழைத்து வருகிறார். மனோஜும், ரோகிணியும் அந்த சாமியாரை உண்மை என்று நம்பி மரியாதையாக நடந்து கொள்கிறார்கள்.
அந்த சாமியார் வெற்றிலையில் கதிரை தேடுவது போல் நடிக்கிறார். பிறகு வெற்றிலையில் ஓட்டை போட்டு கதிர் கையை கண்டுபிடித்துவிட்டதாக சொல்ல, ஸ்ருதி சந்தேகப்பட சாமியார் கோபமாக பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார்.
இதனால் முத்துவும், ஸ்ருதியும் மனோஜை கிண்டல் செய்ய, அவர் வருத்தத்துடன் அறைக்கு செல்கிறார்.
கதிரை கண்டுபிடிக்க முத்துவின் திட்டம்
தனியாக யோசித்துக் கொண்டிருக்கும் முத்துவிடம் மீனா என்ன விஷயம் என்று கேட்கிறார். அதற்கு முத்து, மனோஜ் படித்திருந்தும் மூடநம்பிக்கையை நம்புவது குறித்து வருத்தப்படுகிறார்.
மேலும், கதிரால் ஏமாற்றப்பட்ட அப்பாவுடைய பணத்தை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று உறுதியாக கூறுகிறார்.
மீனா வேண்டாம் என்று சொல்லியும், முத்து கோவிலில் இருந்து எடுத்த கதிரின் உடையை வைத்து தனது நண்பர்கள் மூலம் அவனை தேடப்போவதாக சொல்கிறார்.
ரோகிணியின் பிறந்தநாள் சர்ப்ரைஸ்கள்
குளித்துவிட்டு வெளியே வரும் மனோஜின் டிரஸ் அருகில் ஒரு ரோஜா பூ இருக்கிறது. அவர் குழப்பத்துடன் இருக்கும்போது ரோகிணி ஓடிவந்து கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுகிறார்.
இன்று முழுவதும் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப்போவதாக சொல்கிறார். மனோஜ் சந்தோஷமாக வெளியே வர குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்துகிறார்கள்.
அப்போது ஒருவர் வந்து மனோஜின் பெயரில் கார் புக் பண்ணியிருப்பதாக சொல்ல, அவர் மறுக்கிறார். உடனே ரோகிணி தான் புக் பண்ணியதாக கூறுகிறார். அடுத்ததாக கேக் வந்து சர்ப்ரைஸ் கொடுக்கப்படுகிறது. அதுவும் ரோகிணியின் ஏற்பாடு தான்.
கேக் வெட்டி அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். முத்து வழக்கம் போல் மனோஜை கிண்டல் செய்ய வர, ரோகிணி இன்று அவரை எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். ஆனாலும் முத்துவால் கிண்டல் செய்யாமல் இருக்க முடியவில்லை.
பரசுவின் மகள் திருமணத்தில் குடும்பத்தினர்
ரோகிணியும் மனோஜும் கடைக்கு கிளம்பும்போது முத்து பரசுவின் மகள் கல்யாணம் இருப்பதை ஞாபகப்படுத்துகிறார். ரோகிணியும் தான் மேக்கப் போடப்போவதாக சொல்லிவிட்டு செல்கிறார்.
பின்னர் அனைவரும் பரசுவின் மகள் கல்யாணம் நடக்கும் மண்டபத்திற்கு வருகிறார்கள். பரசுராமன் எல்லோரையும் வரவேற்கிறார். மண்டபத்தில் கறிக்கடைக்காரர் வேலையில் மும்முரமாக இருக்கிறார். பரசு, மீனாவின் டெக்கரேஷனை பாராட்டுகிறார்.
விஜயா வழக்கம்போல் புலம்புகிறார். ரோகிணி மணப்பெண் அறைக்கு மேக்கப் போட செல்கிறார். அப்போது மேக்கப் போட ஆள் வந்திருப்பதாக கறிக்கடைக்காரரிடம் ஒருவர் சொல்ல, அவர் ஜூஸ் எடுத்து வருவதாக கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
இன்றைய எபிசோடில் ரோகிணியின் சர்ப்ரைஸ் கொண்டாட்டங்களும், கதிரை கண்டுபிடிக்க முத்து எடுக்கும் முயற்சியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்த எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.