ஒரு படம் எடுக்கணும்ன்னு சொல்லி.. வெளிநாட்டுக்கு கூட்டிகிட்டுபோய்.. நாசம் பண்ணிட்டாங்க.. நீலிமா ராணி பகீர்..!

ஒரு படம் எடுக்கணும்ன்னு சொல்லி.. வெளிநாட்டுக்கு கூட்டிகிட்டுபோய்.. நாசம் பண்ணிட்டாங்க.. நீலிமா ராணி பகீர்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சின்னத்திரை தொடர்களில் வில்லி மற்றும் ஹீரோயின் என பல பரிமாணங்களில் நடித்து அசத்தி வருபவர் நடிகை நீலிமா ராணி. 

திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நீலிமா, சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. 

கல்லூரி விழாவில் பேசிய நீலிமா ராணி, தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்களையும், அவற்றை கடந்து வந்ததையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். 

ஒரு படம் எடுக்கணும்ன்னு சொல்லி.. வெளிநாட்டுக்கு கூட்டிகிட்டுபோய்.. நாசம் பண்ணிட்டாங்க.. நீலிமா ராணி பகீர்..!

அவர் தனது உரையில், "நான் என்னுடைய ஆறாவது வயதில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தேன். தேவர்மகன் திரைப்படத்தில் நாசரின் மகளாக நடித்தது எனக்கு பெரும் புகழை சேர்த்தது. 1992ம் ஆண்டில் இருந்து என்னுடைய சினிமா பயணம் தொடங்கியது. 

கடவுளின் ஆசீர்வாதத்தால் தற்போது வரை சினிமா துறையில் நீடித்து நிலைத்து நிற்கிறேன்," என்று தனது திரையுலக பயணத்தின் தொடக்கத்தை விவரித்தார். தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களையும், அவற்றை அவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதையும் பகிர்ந்து கொண்டார். 

"என்னுடைய 21ஆவது வயதில் இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். ஆனால், திருமணம் ஆன ஆறு மாதத்தில் என்னுடைய தந்தை இறந்துவிட்டார். இது எனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பாக இருந்தது. அந்த துக்கத்தில் இருந்து என்னால் எளிதில் மீண்டு வர முடியவில்லை. 

அந்த வேதனையை மறக்க நான் நிறைய கோவில்களுக்கு சென்றேன், புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன், மேலும் பல விஷயங்களில் என் கவனத்தை செலுத்தி மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டு வந்தேன்," என்று தனது மன வேதனையிலிருந்து மீண்ட கதையை உருக்கமாக கூறினார். 

ஒரு படம் எடுக்கணும்ன்னு சொல்லி.. வெளிநாட்டுக்கு கூட்டிகிட்டுபோய்.. நாசம் பண்ணிட்டாங்க.. நீலிமா ராணி பகீர்..!

திரைப்பட தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டம் குறித்து நீலிமா ராணி பேசுகையில், "2017ம் ஆண்டு நானும் எனது கணவரும் சேர்ந்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டோம். என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சுமார் நான்கு கோடி ரூபாய் பட்ஜெட்டில் அந்த படத்தை தயாரிக்க முடிவு செய்து, வெளியில் வட்டிக்கு பணம் வாங்கி தயாரித்தோம். 

வெளிநாட்டில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்தபடி உருவாகவில்லை. நாசம் பண்ணித்டாங்க... சொல்லப்போனால், அந்த படத்தை குப்பையில் போடும் அளவுக்கு தான் அதன் தரம் இருந்தது. நாங்கள் சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் இழந்துவிட்டோம். 

அந்த சமயத்தில் நானும் என் கணவரும் மனம் தளராமல், ‘நடந்தது நடந்துவிட்டது, இனிமேல் நாம் மீண்டு வரவேண்டும்’ என்று ஒரு முடிவுக்கு வந்தோம். மீண்டும் நான் வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் போன்ற சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். 

ஒரு படம் எடுக்கணும்ன்னு சொல்லி.. வெளிநாட்டுக்கு கூட்டிகிட்டுபோய்.. நாசம் பண்ணிட்டாங்க.. நீலிமா ராணி பகீர்..!

நாங்கள் வாடகை வீட்டில் குடியேற கூட பணம் இல்லாமல் நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்தோம். ஆனால், எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தோம். தோல்வியையும் சாதாரணமாக எடுத்துக்கொண்ட மனப்பக்குவம் இருந்ததால், எங்களால் மீண்டும் அந்த இடத்தை அடைய முடிந்தது. 

2017ம் ஆண்டு மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘என்றென்றும் புன்னகை’, ‘நிறம்மாறாத பூக்கள்’ போன்ற சீரியல்களை தயாரித்தோம். என்னுடைய குறிக்கோள் சினிமா தயாரிப்பாளராக வேண்டும் என்பது தான், ஆனால் முதலில் சீரியலில் இருந்து பயணத்தை தொடங்கினோம். 

ஒரு படம் எடுக்கணும்ன்னு சொல்லி.. வெளிநாட்டுக்கு கூட்டிகிட்டுபோய்.. நாசம் பண்ணிட்டாங்க.. நீலிமா ராணி பகீர்..!

ஒரு நாள் நிச்சயம் திரைப்படமும் தயாரிப்போம்," என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அவர் இறுதியாக கூறியதாவது, "‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்று சொல்வார்கள். 

அது எந்த அளவிற்கு உண்மை என்பதை வாழ்க்கையை அனுபவிக்கும் போது தான் புரியும். ஆகையால், நீங்கள் என்னவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். செல்போனை கையில் வைத்துக்கொண்டு ரீல்ஸ் பார்த்து நேரத்தை வீணாக்காதீர்கள். 


ஒரு படம் எடுக்கணும்ன்னு சொல்லி.. வெளிநாட்டுக்கு கூட்டிகிட்டுபோய்.. நாசம் பண்ணிட்டாங்க.. நீலிமா ராணி பகீர்..!

நேரம் தான் செலவாகுமே தவிர, நம்மால் சுயமாக எதையும் சிந்திக்க முடியாது. அதனால் செல்போனை தவிர்த்துவிட்டு உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்," என்று அறிவுரை கூறி தனது உரையை நிறைவு செய்தார். 

நீலிமா ராணியின் இந்த ஊக்கமளிக்கும் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சவால்களை எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை நீலிமா ராணி தனது சொந்த அனுபவத்தின் மூலம் மாணவர்களுக்கு உணர்த்தியது பலரையும் கவர்ந்துள்ளது.