கணவரின் நண்பர் வீட்டில்.. சின்ன அறையில்.. அரங்கேறிய கொடுமை.. கதறும் நீலிமா ராணி..!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகை நீலிமா ராணி, மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றியுள்ளார். 

"அக்னி சிறகே" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தனது வாழ்க்கையில் தான் சந்தித்த சவால்கள், கஷ்டங்கள் மற்றும் வெற்றிகள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரையில் முன்னணி நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்த நீலிமா ராணி, 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தார். 

இப்போதும் திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் அவர், தனது அனுபவங்களை மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டது அவர்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்துள்ளது.

இளவயதில் திருமணம், தந்தையின் இழப்பு


தனது பேச்சின்போது நீலிமா ராணி, "எனக்கு 21 வயதில் இசைவாணன் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஆறு மாதத்தில் என் தந்தை இறந்துவிட்டார். 

அந்த இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கு நான் நிறைய சிரமப்பட்டேன். கோயில்களுக்கு சென்றேன், புத்தகங்கள் படித்தேன், பல விஷயங்களில் கவனத்தை செலுத்தி மெல்ல மெல்ல அந்த துயரத்தில் இருந்து வெளியே வந்தேன்" என்று தனது ஆரம்ப கால வாழ்க்கையின் சவால்களை குறிப்பிட்டார்.

4 கோடி ரூபாய் நஷ்டம், நடுத்தெருவில் தவிப்பு


தொடர்ந்து தனது தொழில் வாழ்க்கை குறித்து பேசிய நீலிமா ராணி, "கடந்த 2017 ஆம் ஆண்டு நானும் என் கணவரும் சேர்ந்து 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தோம். 

வெளியில் வட்டிக்கு கடன் வாங்கி படத்தை தயாரித்தோம். ஆனால் அந்த படம் நினைத்த மாதிரி சரியாக போகவில்லை. கடைசியில் அந்த படத்தை குப்பையில் தான் போட்டோம். 

கடன் வாங்கி நடுத்தெருவில் நின்றோம். அப்போது நானும் என் கணவரும் சரி இழந்தாச்சு, இனி இங்கிருந்து எப்படி நகரப் போகிறோம் என்று யோசித்தோம்" என்று அந்த கஷ்டமான சூழ்நிலையை விவரித்தார்.

சின்னத்திரையில் மறுபிரவேசம், தயாரிப்பாளராக உயர்வு


அந்த சமயத்தில் தான் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்ததாக கூறிய நீலிமா ராணி, "வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் போன்ற தொடர்களில் நடித்தேன். 

வாடகை வீட்டுக்கு கூட போக முடியாத நிலையில் என் கணவரின் நண்பர் வீட்டில் ஒரு அறையில் தங்கினோம். எங்களுடைய குறிக்கோள் வெற்றி பெற வேண்டும் என்று இருந்ததால், தோல்வியையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தோம். 

அதனால்தான் மீண்டும் அந்த இடத்தை எங்களால் அடைய முடிந்தது. 2017ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்றென்றும் புன்னகை, நிறம்மாறாத பூக்கள் ஆகிய சீரியல்களை தயாரித்தோம். 

சினிமா தயாரிப்பதே என் குறிக்கோளாக இருந்தாலும், சீரியலையே முதலில் தயாரித்தோம். கண்டிப்பாக ஒரு நாள் படம் தயாரிப்போம்" என்று தனது விடாமுயற்சியை எடுத்துரைத்தார்.

மாணவிகளுக்கு அறிவுரை


இறுதியாக மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய நீலிமா ராணி, "நாம் சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டால், யாரும் நமக்கு கை கொடுக்க வரமாட்டார்கள். நமக்கு நாமே தான் கை கொடுத்து உதவிக்கொள்ள வேண்டும். எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். 

அது எந்த அளவிற்கு உண்மை என்பது சொந்தமாக அனுபவிக்கும்போதுதான் புரியும். எனவே, நீங்கள் என்னவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். செல்போனை கையில் வைத்து கொண்டு ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தால், 

நேரம் தான் செலவாகுமே தவிர, சுயமாக எதையுமே நம்மால் சிந்திக்க முடியாது. இதனால் செல்போனை தவிர்த்து விட்டு உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்" என்று அறிவுரை வழங்கினார். நீலிமா ராணியின் இந்த உத்வேகமான பேச்சு மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--