அந்த வார்த்தை சொல்லி வசமாக சிக்கிய ஆசாமி.. மேடையை அதிர வைத்த புஷ்பா நடிகை அனசுயா பரத்வாஜ்..!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் வலம் வருபவர் அனுசுயா பரத்வாஜ். ரங்கஸ்தலம் மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். 

கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது நடிகை அனுசுயா பரத்வாஜும் பொதுமக்களுடன் இணைந்து ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 

இந்நிலையில், அங்கு அவரைப் பார்த்த ரசிகர் ஒருவர் "ஆன்ட்டி" என்று அழைத்ததால் அனுசுயா கடும் கோபமடைந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 39 வயதான அனுசுயா பரத்வாஜ் தனது கல்லூரி காலத்திலேயே சாக்ஷி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 

அதனைத் தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். பின்னர் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே அனுசுயா தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? ரசிகர்களை திக்குமுக்காட வைத்த விருமாண்டி அபிராமி..!

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? ரசிகர்களை திக்குமுக்காட வைத்த விருமாண்டி அபிராமி..!

குறிப்பாக, ரங்கஸ்தலம் படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த ராஜ்ஜம் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான மெகா ஹிட்டான புஷ்பா திரைப்படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். 


பொதுவாக திரையுலகில் நடிகர்கள் 40 வயதை கடந்தாலும் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வரும் நிலையில், நடிகைகளுக்கு மட்டும் வயது ஒரு தடையாக பார்க்கப்படுகிறது. மேலும், நடிகைகள் தங்கள் வயதை வெளியில் சொல்வதைக்கூட விரும்புவதில்லை. 

இந்நிலையில், அனுசுயா பரத்வாஜிடம் ரசிகர் ஒருவர் பொது இடத்தில் "ஆன்ட்டி" என்று அழைத்தது அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹோலி பண்டிகையின்போது ரசிகர் ஒருவர் தன்னை "ஆன்ட்டி" என்று அழைத்ததை கேட்டு ஆவேசமடைந்த அனுசுயா, "துணிச்சல் இருந்தா மேடைக்கு வா, நான் யார் என்று காட்டுகிறேன். 

என்னை தூண்டிவிட்டால் விளைவு எப்படி இருக்கும் என்பதையும் காட்டுவேன்" என்று கோபமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுசுயாவின் இந்த எதிர்வினைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

பொது இடத்தில் ஒருவரைப் பார்த்து அவ்வாறு அழைப்பது நாகரீகமற்ற செயல் என்றும், நடிகைகளுக்கு வயதாகிவிட்டாலும் அவர்களை மதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், திரையுலகில் நிலவும் வயது பாகுபாடு குறித்தும் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதே சமயம், சிலர் பொதுவெளியில் அனுசுயா இவ்வாறு கோபப்பட்டது சரியல்ல என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

எப்படியிருந்தாலும், அனுசுயா பரத்வாஜ்ஜின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post