ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான "டப்பா கார்ட்டெல்" வெப் சீரிஸ் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஜோவின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், அவர் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் ஒரு தரப்பினரிடையே சர்ச்சையை கிளப்பியது.
மேலும், அவர் தமிழ் சினிமா குறித்து பேசியதும் விமர்சனத்தை சந்தித்தது. இந்நிலையில், ஜோதிகா குறித்து பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சூர்யாவும், ஜோதிகாவும் தீவிரமாக காதலித்து 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
குடும்பம் மற்றும் குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்த ஜோதிகா, "36 வயதினிலே" படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பின்னர் "நாச்சியார்", "பொன்மகள் வந்தாள்", "உடன் பிறப்பே", "ராட்சசி" போன்ற படங்களில் நடித்தார். நல்ல ரொமான்ட்டிக் கதையம்சம் உள்ள படங்களில் தானும், சூர்யாவும் இணைந்து நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஜோதிகா மும்பைக்கு சென்று செட்டிலாகி பாலிவுட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினார். சூர்யாவையும் இந்தி படங்களில் கவனம் செலுத்த வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் "டப்பா கார்ட்டெல்" என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.
போதை பொருள் கடத்தும் பெண்களை மையமாக கொண்ட அந்த தொடரில், சாப்பாட்டு டப்பாவில் போதை பொருளை கடத்துவது முக்கிய கதையாக இருந்தது. இந்த தொடரில் ஜோதிகா சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டியில், "சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆத்திகர் இல்லை. கோயில்களுக்கு உதவி செய்வதை விட அரசு மருத்துவமனைகளுக்கு உதவலாம் என்று கூறியதை சிலர் திரித்து பேசினார்கள். இப்போது அவர் சிகரெட் பிடித்தது சர்ச்சையாகி இருக்கிறது.
வடமாநிலங்களில் தென் மாநில நடிகர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் அங்கேயே தங்க வேண்டும். அதனால்தான் ஜோதிகா மும்பையில் தங்கினார். அங்கு அவரது குடும்பம் இருக்கிறது. சூர்யா 'வாடிவாசல்' படத்திற்காக சென்னை வருகிறார்.
'டப்பா கார்ட்டெல்', 'கோலமாவு கோகிலா' படத்தின் சாயலில் இருந்தது. அதில் பிரவுன் சுகர் சப்ளை செய்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்பதால் ஜோதிகா அப்படி நடித்திருக்கிறார். இயக்குநர் சொல்வதைத்தான் நடிகர்கள் செய்ய முடியும். ஆனால் ஜோதிகா சிகரெட் பிடித்ததை பார்த்து சிவக்குமார் டென்ஷன் ஆகிவிட்டார்.
இதுவரை அவர் கண்ணியமான படங்களில் நடித்திருக்கிறார். அவரது மகன்களும் அப்படித்தான். 'தனியாக குடித்தனம் போனால் இப்படித்தான் மானத்தை வாங்குவீர்களா? பணத்துக்காக இப்படியும் நடிக்க வேண்டுமா?' என்று சிவக்குமார் சூர்யாவுக்கு போன் செய்து திட்டியதாக சிலர் கூறுகிறார்கள். ஏற்கனவே ஜோதிகா - சூர்யா திருமணத்திற்கு சிவக்குமார் சம்மதிக்கவில்லை. விஜயகாந்த்திடமும் இது குறித்து பேசியிருக்கிறார்.
மும்பையில் நடந்த விழாவில் ஜோதிகா அணிந்திருந்த உடை முதல் சர்ச்சை. வாயில் சிகரெட்டை வைத்து நடிப்பது நடிப்புதான் என்று சிவக்குமாருக்கு தெரியும். ஆனால் சிலர் அவரிடம் 'உங்கள் மருமகள் இப்படி நடிக்கிறாராமே' என்று கேட்பார்கள்.
அதற்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற பயம் அவருக்கு இருக்கிறது. பாரம்பரிய குடும்பம் அவருடையது. சூர்யாவின் குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்படி நடிக்கலாமா என்று அவர் நினைக்கிறார். இது போன்ற காட்சிகளில் விமர்சனங்கள் வரும் என்ற சங்கடமும் அவருக்கு இருக்கிறது.
ஜோதிகா மீது சிவக்குமாருக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் இருக்கிறது. இப்படி ஒரு மருமகள் கிடைக்க மாட்டார் என்று அவரே சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் நடிக்கும் இதுபோன்ற கதாபாத்திரங்களால்தான் சர்ச்சைகளும் சங்கடங்களும் வருகின்றன.
இதையெல்லாம் தவிர்க்க நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும். ஜோதிகா இனி கவனமாக இருப்பார் என்று தோன்றுகிறது" என்று தெரிவித்துள்ளார். சபிதா ஜோசப்பின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.