திரையுலகில் தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்த வெகு சில நடிகர்களில் இவரும் ஒருவர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி' திரைப்படத்தில் ரோபோ ஷங்கர் வெளிப்படுத்திய சிறந்த நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்நிலையில், 'திரு மாணிக்கம்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சமுத்திரகனி குறித்து ரோபோ ஷங்கர் பேசிய நெகிழ்ச்சியான விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
'திரு மாணிக்கம்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரோபோ ஷங்கர், நடிகர் சமுத்திரகனியுடனான தனது நெருங்கிய நட்பு குறித்து மனம் திறந்து பேசினார். அதில், "சமுத்திரகனி எனக்கு உடன்பிறவாத சகோதரர் போன்றவர். எனக்கும் அவருக்கும் இடையேயான பந்தம் மிகவும் ஆழமானது.
எனது மகள் இந்திரஜா, சமுத்திரக்கனியின் பெயரை 'பெரியப்பா' என்று தான் அவருடைய போனில் சேமித்து வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு அவர் எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய நபராக இருக்கிறார்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும், தனது வருத்தத்தையும் ரோபோ ஷங்கர் அந்த மேடையில் வெளிப்படுத்தினார். "சமுத்திரக்கனி என் குடும்பத்தில் அங்கம் வகித்தாலும், இதுவரை அவர் என் பேரனை வந்து பார்க்காதது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
இருப்பினும், விரைவில் அவர் என் பேரனை பார்க்க வருவார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்" என்று கூறினார். சமுத்திரகனியுடன் இணைந்து நடிக்க ஆசை: தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர், " நானும் சமுத்திரகனியும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு.
இது குறித்து பலமுறை நான் அவரிடம் விருப்பம் தெரிவித்து இருக்கிறேன். கண்டிப்பாக அந்த கனவு ஒரு நாள் நனவாகும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார்.
ரோபோ ஷங்கர் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இரு நடிகர்களும் திரையுலகில் வெவ்வேறு பாணியில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்கள். இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் அது ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரோபோ ஷங்கர் பேசிய இந்த நெகிழ்ச்சியான பேச்சு, சமுத்திரகனி மற்றும் ரோபோ ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் கமெண்ட் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
0 கருத்துகள்