கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன் மாப்ள.. ஆர்த்தியின் அம்மா வெளியிட்ட கடைசி பதிவு!
நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஜெயம் ரவி தனது மாமியார் சுஜாதா விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், முதன்முறையாக சுஜாதா விஜயகுமார் தனது மவுனத்தை உடைத்துள்ளார். சுஜாதா விஜயகுமார் தனது அறிக்கையில், “கடந்த சில காலமாக என்மீது கொடுமைக்காரி, குடும்பத்தைப் பிரித்தவள், பணப்பேய், சொத்து அபகரித்தவள் என்று பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது இவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த மவுனத்தை உடைக்கிறேன்,” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடைசியாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். 2007-ம் ஆண்டு ‘வீராப்பு’ என்ற திரைப்படத்தை முதன்முதலில் தயாரித்ததாகவும், அதன்பின் சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததாகவும் தெரிவித்தார். 2017-ல் தனது மாப்பிள்ளையான ஜெயம் ரவி, “நீங்கள் திரைப்படங்களையும் தயாரிக்க வேண்டும்” என்ற...