வடை போச்சே.. தவறான முடிவால் கதறும் கீர்த்தி சுரேஷ்..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் 'பேபி ஜான்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தனது முதல் ஹிந்தி படம் என்பதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால், இப்படம் படுதோல்வியடைந்து பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் 'பேபி ஜான்' படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டதால், மாபெரும் வெற்றி பெற்ற 'சாவா' திரைப்படத்தை நிராகரித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

'சாவா' திரைப்படம் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

இப்படம் உலக அளவில் ரூ. 760 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், 'சாவா' படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த கதாநாயகி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது கீர்த்தி சுரேஷ் தானாம். 

ஆனால், அந்த சமயத்தில் அவர் 'பேபி ஜான்' திரைப்படத்தில் நடித்து வந்ததால், 'சாவா' படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை அவர் நிராகரித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. 

ஒருபுறம் கீர்த்தி சுரேஷின் முதல் பாலிவுட் படமான 'பேபி ஜான்' தோல்வியடைந்த நிலையில், அவர் நடிக்க மறுத்த 'சாவா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்காததால் கீர்த்தி சுரேஷுக்கு இந்த வாய்ப்பு நழுவிப் போனதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post