நடிகை பூனம் பாஜ்வா எப்போதுமே தனது கலகலப்பான குணத்தாலும், உணவு மீதான காதலாலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர்.
சமீபத்தில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், ஒரு பெரிய டேபிள் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் மெகா சைஸ் தோசையை அவர் சாப்பிட்டு மகிழ்வது போல் போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எத்தா தண்டி.. பாத்தாலே எச்சில் ஊறுதே.. என்று ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.
இவ்வளவு பெரிய தோசையை எப்படி சாப்பிடுகிறார் என்றும், அவருக்கு உணவு மீது இருக்கும் பிரியத்தை பார்த்தும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிலர் அந்த தோசையின் அளவை பார்த்து வியந்து போயும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். பூனம் பாஜ்வா எப்போதுமே தனது உணவு பழக்கவழக்கங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்த மெகா சைஸ் தோசை புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த கியூட்டான மற்றும் ஜாலியான புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.