ஒரு அப்பன் பண்ற வேலையா இது..? குண்டை தூக்கி போட்ட வனிதா..!

நடிகை வனிதா விஜயகுமார் பற்றி அறிமுகம் தேவை இல்லை சர்ச்சைக்கு பெயர் போன இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது என்னுடைய அப்பா பேசிய ஒரு பேட்டியை நான் பார்த்தேன். 

அதில் அவர் என்னுடைய எல்லா மகள்களும் நான் சொல்லக்கூடிய வார்த்தையைத்தான் கேட்பார்கள் என் பேச்சை மீறி எதையும் செய்ய மாட்டார்கள் என்று பேசியிருக்கிறார். 

இந்த வீடியோவை நிறைய பேர் எனக்கு அனுப்பினார்கள். நானும் அந்த வீடியோவை பார்த்தேன். என்னுடைய பேச்சை என்னுடைய எல்லா மகள்களும் கேட்பார்கள் என்று அவர் சொல்லியதை விட வனிதாவை தவிர மீதி எல்லோரும் என் பேச்சை கேட்பார்கள் என்று சொல்லியிருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். 

உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்பதற்காக என்னுடைய பெயரையே கூறாமல் உங்களுடன் இப்போது இருக்கக்கூடியவர்கள் மட்டும்தான் உங்களுடைய மகள்கள் என்பது போல பேசி இருப்பதை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்..? 

நான் உங்கள் மகள் தானே.. உங்களுக்கு பிறந்தவள் தானே.. அப்படி இருக்கும்போது.. என்னை தனியாக விட்டு விட்டு என்னுடைய எல்லா மகள்களும் நான் சொல்லக்கூடிய பேச்சை கேட்பார்கள் என்று கூறினால்.. அப்போது நான் யார்..? என்னுடைய வாழ்க்கைக்கு என்ன தேவையோ.. அதனை தேர்வு செய்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. 

எனக்கு பிடிக்காத ஒன்றை நீங்கள் எனக்கு அட்வைஸ் செய்ய முடியாது. எனக்கு பிடிக்கவில்லை என்று ஒரு விஷயத்தை மறுத்தால் நான் உங்களுடைய மகள் இல்லை என்று ஆகிவிடுவேனா..? 

அந்த பேட்டியில் வனிதாவை தவிர மீதி எல்லா மதங்களும் நான் சொன்ன பேச்சை கேட்பார்கள் என்று சொல்லியிருந்தால் நான் கைதட்டி இருப்பேன். ஆனால், வனிதா என்கிற மகளே இல்லை என்பது போல நீங்கள் நடந்து கொள்கிறீர்கள். 

இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற விஷயம்.. இல்லை இல்லை.., ஒரு முழு மலையையே சோற்றில் மறைக்கக் கூடிய விஷயத்தை என் அப்பா செய்திருக்கிறார். ஒரு அப்பா செய்கிற வேலையை இது..? என்று கடுமையாக விளாசி இருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார். 

இது பற்றி உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--