ரஜினியின் கூலி படப்பிடிப்பு தளத்தில் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்! இதோ வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக குறுகிய காலத்தில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் லோகேஷ் கனகராஜ்

2016ஆம் ஆண்டு வெளியான 'அவியல்' என்ற குறும்படம் மூலம் திரையுலகில் கவனத்தை ஈர்த்த இவர், 2017ஆம் ஆண்டு 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். 

director lokesh kanagaraj celebrates his birthday in coolie sets

அதனைத் தொடர்ந்து 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உயர்ந்தார். 

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'கூலி' என்ற மாஸ் திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

director lokesh kanagaraj celebrates his birthday in coolie sets

ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை 'கூலி' படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 

director lokesh kanagaraj celebrates his birthday in coolie sets

படக்குழுவினரும், ரசிகர்களும் அவருக்கு உற்சாகமாக வாழ்த்துக்களை தெரிவித்தனர். லோகேஷ் கனகராஜ், வித்தியாசமான கதைக்களங்களையும், திரைக்கதை உத்திகளையும் கையாண்டு ரசிகர்களை கவர்ந்தவர். 

இதையும் படிங்க :  இன்று லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் - அவரது தற்போதைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?

அவரது படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனைகளை படைத்து வருகின்றன. தற்போது ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் 'கூலி' படத்தின் மீதும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். 

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது அடுத்தடுத்த படைப்புகளுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்