அவுத்து போட்டா தான் இது கிடைக்குமா.. விஜய் டிவி பிரபலம் சிவாங்கி பரபரப்பு பேச்சு..

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாகவும் பிரபலமானவர் சிவாங்கி. தொடக்கத்தில் ஹோம்லியான உடைகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சிவாங்கி, இன்ஸ்டாகிராமிலும் அதே போன்ற புகைப்படங்களையே வெளியிட்டு வந்தார். 

ஆனால் சமீபத்தில் அவர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றபோது, ஷார்ட் உடைகளில் வலம் வந்தார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டதும், பல விதமான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், ஷார்ட் உடையில் புகைப்படம் வெளியிடுவது பட வாய்ப்புக்காகத்தான் என பலர் விமர்சிப்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவாங்கி மனம் திறந்து பேசியுள்ளார். 

சிவாங்கி அந்த பேட்டியில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாவது, "‘அவுத்து போட்டு காட்டுனா மட்டும் பட வாய்ப்பு கிடைச்சிடுமா?’ எனக்குப் புரியவில்லை. என்ன லாஜிக் இது? அவுத்து போடும் எல்லாருக்குமே வாய்ப்பு கிடைக்கிறதா? எனக்கு ஆத்திரமாக வருகிறது!" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

மேலும் அவர், "நான் எப்போதும் டைட்டான உடைகளை போட மாட்டேன். நான் குண்டாக தெரிவதால் அப்படி இருந்தேன். ஆனால் ஷார்ட்ஸ் அணிந்து பார்த்தபோது அது எனக்கு சரியாக இருந்தது. நான் என் மகிழ்ச்சிக்காகத் தான் அப்படி செய்தேன். 

பட வாய்ப்புக்காக அப்படி செய்யவில்லை," என்று திட்டவட்டமாக கூறினார். தனது உடை விருப்பம் தனிப்பட்டது என்றும், சினிமா வாய்ப்புக்காக அவர் கவர்ச்சி காட்டவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். உடை மாற்றத்திற்குப் பின் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சிலர், சிவாங்கியின் கேரக்டர் மாறிவிட்டதாக கருத்து தெரிவித்ததையும் அவர் மறுத்தார். 

"உடை மாறிவிட்டால் கேரக்டர் மாறிவிட்டது என்று கூட சொல்கிறார்கள். அப்படி இல்லை. காலம் முழுக்க சுடிதார் மட்டுமே போட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பிய சிவாங்கி, உடை என்பது தனிப்பட்ட விருப்பம் என்றும், அதில் மற்றவர்கள் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் சூசகமாக தெரிவித்தார். 

சிவாங்கி ஷார்ட் உடையில் புகைப்படங்கள் வெளியிட்டது இணையத்தில் பேசு பொருளானது. ஒரு பக்கம் ரசிகர்கள் அவரது புதிய தோற்றத்தை வரவேற்றாலும், மறுபக்கம் சிலர் இது சினிமா வாய்ப்புக்காக செய்யப்படும் முயற்சி என விமர்சித்தனர். 

இந்த விமர்சனங்களுக்கு சிவாங்கி தனது பேட்டியில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். தன்னுடைய உடைத் தேர்வு தனிப்பட்ட விருப்பம் என்றும், யாரையும் கவருவதற்காகவோ அல்லது சினிமா வாய்ப்புக்காகவோ தான் மாறவில்லை என்பதையும் அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.